கிருஷ்ணகிரி: குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சண்டை சேவல் விற்பனை துவங்கியது.
கிருஷ்ணகிரி அடுத்த, குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ஆடு, மாடு மற்றும் கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். குறிப்பாக, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, ஈரோடு மற்றும் கொங்கணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, சண்டை சேவல்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதை வாங்க ஐதராபாத், சித்தூர், கடப்பா, காக்கிநாடா பகுதி வியாபாரிகள் வருகின்றனர். இங்கு வால் சேவல், வெத்துகால், சிலிக்கிஸ், கட்டை மூக்கன், கத்தி கொண்டை, ஆயிரம் கொண்டை உள்ளிட்ட பல்வேறு ரக சண்டை சேவல்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த சேவல்கள், 3,000 ரூபாய் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சண்டை சேவல்களை வாங்க வருவோர், அதன் சண்டையிடும் திறனை பரிசோதித்து, அதற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்கின்றனர். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காலை, 7:00 மணிக்கு தொடங்கும் சந்தை, அடுத்து வரும் வாரங்களில் அதிகாலை, 4:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை நடக்கும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE