சேலம்: போக்குவரத்து தொழிலாளர்கள், கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும், 7 முதல், அனைத்து மண்டல அலுவலகங்களில், காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர். இதுகுறித்து, போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், தொழிலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, 14வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்கி ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி, டிச., 3ல் வேலை நிறுத்த, 'நோட்டீஸ்' வழங்கினோம். சமரச பேச்சுவார்த்தை, டிச.,15ல் நடந்தது. அதில், தொழிலாளர் ஆணையர், பிரச்னைகளில் சிலவற்றை தீர்த்து வைக்க வழங்கிய அறிவுரையை நிர்வாகங்கள் ஏற்றன. ஆனால், போக்குவரத்து நிர்வாகங்கள், ஆணையரின் அறிவுரையை நடைமுறைப்படுத்தவில்லை. மேலும், பேச்சுவார்த்தையை தொடங்க, அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஜன., 6க்குள், போக்குவரத்துக்கழகங்கள், 14வது ஊதிய பேச்சுவார்த்தையை தொடங்கி அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும். இல்லையெனில், ஜன., 7ல் தமிழகம் முழுதும் மண்டல அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். பிரச்னை தீரும் வரை, காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE