வாணியம்பாடி: ''பொய் வாக்குறுதிகளை அளிக்கும், தி.மு.க.,வை மக்கள் புறக்கணிப்பர்,'' என, அமைச்சர் வீரமணி பேசினார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில், அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தலைமை வகித்தார். பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் வீரமணி பேசியதாவது: பொய் வாக்குறுதிகளை அளிக்கும், தி.மு.க.,வை மக்கள் புறக்கணிப்பர். இந்தியாவில், மூன்றாவது பெரிய கட்சியான, அ.தி.மு.க.,வை யாராலும் தோற்கடிக்க முடியாது. தி.மு.க.,வுக்கு தைரியம் இருந்தால், கூட்டணி இல்லாமல் மக்களை சந்திக்க முடியுமா? அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டாலும், 234 தொகுதிகளில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார். மாதனூரில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில், அமைச்சர் வீரமணி பேசியதாவது: அ.தி.மு.க.,வை, 100 நாட்கள் கூட நடத்த முடியாது என, கருணாநிதி முன்பு கூறினார். ஆனால், 48 ஆண்டுகள் நடத்தி அதில், 30 ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளோம். மக்கள் மத்தியில், நம் ஆட்சிக்கு நல்ல பெயர் இருக்கிறது. எல்லோரும் ஒற்றுமையாக இருந்து, வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE