திருவண்ணாமலை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டு, சம்பந்த விநாயகர், மூலவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து, நவக்கிரக சன்னதிகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, கிரிவலம் சென்றனர். மேலும், திருவண்ணாமலையில், பூத நாராயணன் கோவில், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில், இஞ்சி மேடு சிவன் கோவில், படவேடு லட்சுமி நரசிம்மர் உள்ளிட்ட ஆலயங்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. நள்ளிரவு, 12:00 மணிக்கு வீதியின் முக்கிய இடங்களில், இளைஞர்கள் தாரை தப்பட்டை அடித்து, பட்டாசு வெடித்து, சினிமா பாடல்களுக்கு நடனமாடியவாறு கேக் வெட்டி கொண்டாடினர். திருவண்ணாமலை, ஆற்காடு லூதரன் சர்ச் மற்றும் உலக மாதா தேவாலயங் களிலும், நள்ளிரவு பிரார்த்தனை நடந்தது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE