பொது செய்தி

தமிழ்நாடு

12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்!

Updated : ஜன 02, 2021 | Added : ஜன 02, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
வெள்ளி முதல் வியாழன் வரை (1.1.2021 - 7.1.2021 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம் சந்திரன், செவ்வாய், புதன் சாதக நிலையில் உள்ளனர். சூரியன் வழிபாடு வளம் தரும்.அசுவினி: கொள்கைகளை சற்று மாற்றிக் கொள்ளும் சூழல் ஏற்படும். உங்களுக்கு பிடிக்காத சிலருடன் கைகோத்து பணியாற்ற வேண்டி வரும். அதை மன நிறைவுடன்
வாரபலன், பரிகாரம், மேஷம், ரிஷபம், மிதுனம்,  கடகம், சிம்மம்,  கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம், கும்பம், மீனம்

வெள்ளி முதல் வியாழன் வரை (1.1.2021 - 7.1.2021 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்


சந்திரன், செவ்வாய், புதன் சாதக நிலையில் உள்ளனர். சூரியன் வழிபாடு வளம் தரும்.
அசுவினி: கொள்கைகளை சற்று மாற்றிக் கொள்ளும் சூழல் ஏற்படும். உங்களுக்கு பிடிக்காத சிலருடன் கைகோத்து பணியாற்ற வேண்டி வரும். அதை மன நிறைவுடன் செய்வீர்கள்.
பரணி: புதிய ஐடியாக்கள் தோன்றுவதால் ஆக்கப்பூர்வமான செயல்கள் நிகழும். எப்போதோ நீங்கள் கொடுத்துவிட்டு மறந்துபோன தொகை திரும்ப வரும். தாயின் ஆசியை பெறுவீர்கள்.
கார்த்திகை 1: பலநாள் இழந்திருந்த மகிழ்ச்சி கிடைக்கும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். ஆடம்பர ஈடுபாட்டால் வாழ்க்கை முறைகள் மாறும். உங்களின் உண்மை தன்மை பலவகைகளில் உங்களை காக்கும்.


ரிஷபம்


latest tamil news


செவ்வாய், சுக்கிரன், குருவால் நற்பலன் உண்டு. துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.
கார்த்திகை 2,3,4: விவசாயம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் கூடும். நீங்கள் பேசுவதெல்லாம் பலிக்கும் என்பதால் கவனமாக பேசுங்கள். சமுகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
ரோகிணி: தடைப்பட்டு வந்த நேர்த்தி கடனை முடிப்பீர்கள். பெண்கள் மனநிறைவு காண்பர். சகோதர, சகோதரிகளுக்கு அளித்த வாக்கை காப்பாற்றுவீர்கள். இக்கட்டான சமயத்திலும் நேர்மையாக இருப்பீர்கள்.
மிருகசீரிடம் 1,2: புதிய வேலையில் சேர்வதற்கான காலம் வந்துவிட்டது. முந்தைய தலைமுறையினருடன் சற்று அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வியாபாரிகள் உணர்ச்சிப் பூர்வமாக செயல்படுவீர்கள்.


மிதுனம்


சுக்கிரன், செவ்வாய், சந்திரன் அனுகூல பலனை தருவர். குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.
மிருகசீரிடம் 3,4: திருமணமான பெண்களுக்கு தாய் வீட்டிலிருந்து உதவி கிடைக்கும். பிள்ளைகள் வகையில் கல்விச்செலவு உண்டாகும். புது மடிக்கணினி வாங்கி மகிழ்வீர்கள். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.
திருவாதிரை: எதிர்பார்த்த பணம் திங்கட்கிழமை கைக்கு வரும். வார மத்தியில் சிறிய ஏமாற்றம் வந்தாலும் வார இறுதியில் மகிழ்வீர்கள். யாரிடம் எப்படிப் பேச வேண்டும் என்பதை அறிந்து கொள்வீர்கள்.
புனர்பூசம் 1,2,3: வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். யோகா, தியானம் செய்வது நன்மை தரும். பெருந்தன்மையான செயல்களை செய்வீர்கள். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். குடும்பத்தினரின் ஆதரவு ஓரளவு கிடைக்கும்.


கடகம்


குரு, புதன், ராகு அதிர்ஷ்ட பலன்களைத் தருவர். அனுமன் வழிபாடு வெற்றி தரும்.

புனர்பூசம் 4: குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொண்டு மனம் மாறுவீர்கள். அலுவலக விவகாரங்களில் மனதில் தெளிவு வரும். புகழ் அளிக்கக்கூடிய துறைகளில் ஈடுபடுவீர்கள். தியானம், தெய்வ வழிபாடு நலம் தரும்.
பூசம்: வாழ்வில் உயர்வதற்காக திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளமைக் கால நண்பர்களுடன் பழைய நினைவுகளை பேசி மகிழ்வீர்கள்.
ஆயில்யம்: ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். உங்களின் அனுபவம் அதிக வெற்றியை தேடித்தரும். அமைதியான முறையில் சில சாதனைகள் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை எட்டுவீர்கள்.


சிம்மம்


சுக்கிரன், சனி, சந்திரன் அனுகூல அமர்வில் உள்ளனர். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.
மகம்: வாழ்க்கையை அதன் போக்கில் விட்டு இயல்பாக முன்னேறுவீர்கள். அலுவலக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதியவர்களிடம் மனம்விட்டுப் பேச வேண்டாம்.
பூரம்: உங்களின் தனித்தன்மை வெளிப்படும். ஆரோக்யமான போட்டியில் ஈடுபடுவீர்கள். இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடுமையாகப் பேசியவர்கள் இனிமையாக பேச ஆரம்பிப்பர்.
உத்திரம் 1: உங்களின் எண்ணங்களை துணிச்சலுடன் வெளிப்படுத்துவீர்கள். உற்சாகம் உயர்வதால் ஜாலியான வாரமாக அமையும். பணியாளர்கள் நிலுவைப் பணிகளை முடித்து நிம்மதி அடைவீர்கள்.


கன்னி


குரு, கேது, சந்திரன் கூடுதல் நற்பலன்களை தருவர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.
உத்திரம் 2,3,4: துணிச்சலும், தன்னம்பிக்கையும் உங்களை வழிநடத்தி செல்லும். எதிர்பாலினத்தினரிடம் இருந்து சற்றும் எதிர்பாராத பரிசு ஒன்று கிடைக்கும். உறவுகளில் இருந்த மனக்கசப்புகள் மாறும். பெற்றோரின் வழிகாட்டுதலை ஏற்று முன்னேறுவீர்கள்.
அஸ்தம்: நேரம் தவறாமையும், நேரமும் முக்கியம் என்பதை உணர்வீர்கள். பெரிய வாய்ப்பு ஒன்று உங்களை தேடிவரும். சாதக, பாதகமான பலன்கள் கலந்து கிடைக்கக்கூடிய நேரம். தாயின் அன்பை பெறுவீர்கள்.
சித்திரை 1,2: எதிலும் நிதானமும், பொறுமையும் அவசியம். நண்பர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அதை நட்பு ரீதியாக சரிசெய்வீர்கள். பெண்களுக்கு விரும்பியது கிடைக்கும் வாரமாக அமையும்.


துலாம்


குரு, புதன், சந்திரன் அனுகூல பலனைத் தருவர். பெருமாள் வழிபாடு நல்வாழ்வு தரும்.
சித்திரை 3,4: கவலைகள் தீரும். நேர்மையுடன் செயல்பட்டு நற்பெயர் காண்பீர்கள். பணியாளர்கள் கூடுதல் முயற்சியால் நிலுவைப்பணிகளை செய்து முடிப்பீர்கள். கலைஞர்களுக்கு எதிர்பாராத வாய்ப்பு பெரிய இடத்திலிருந்து வரும்.
சுவாதி: குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். பெற்றோரை பெருமைபடுத்தும் வகையில் சில செயலை செய்வீர்கள். பலருக்கு நன்றி சொல்ல வேண்டிய சூழல் ஏற்படும்.
விசாகம் 1,2,3: கடினமான பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். புதிதாக ஒரு கலையை கற்றுக்கொள்வீர்கள். எதையும் எதிர்ப்பதை தவிர்த்தால் வாழ்வில் முன்னேறலாம்.


விருச்சிகம்


சனி, சுக்கிரன், சந்திரன் தாராள நற்பலன்களை வழங்குவர். சிவன் வழிபாடு சிரமத்தை போக்கும்.
விசாகம் 4: எதிர்பாராமல் கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்துவீர்கள். பணியில் புதுமைகள் புகுத்தி பலரின் பாராட்டை பெறுவீர்கள். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். பெற்றோரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.
அனுஷம்: இளைஞர்களுக்கு காதல் அறிமுகமாகும். வெளிநாட்டில் உள்ள உறவினரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். சொத்துக்களை வாங்கும், விற்கும் போதும் கவனமாக இருப்பது நல்லது.
கேட்டை: அலுவலகத்தில் இடமாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நவீன மாற்றங்களை செய்து லாபத்தை பெருக்குவீர்கள். உங்களின் அருமையை பிறருக்கு புரிய வைப்பீர்கள். திட்டமிட்ட பயணம் வெற்றி பெறும்.


தனுசு


செவ்வாய், கேது, ராகுவால் நன்மை கிடைக்கும். சாஸ்தா வழிபாடு நல்லது.
மூலம்: கடுமையான உழைப்பால் சாதனை செய்வீர்கள். குடும்பத்தினரை சிறிதுகாலம் பிரியும்படியான பயணம் ஒன்றைத் துவங்க நேரிடும். பெண்கள் மன நிறைவு காண்பீர்கள்.
பூராடம்: குடும்பத்தில் ஒருவரை நினைத்து பெருமைப்படும்படியான சம்பவம் நிகழும். தொழிலில் உள்ள போட்டிகளைச் சுலபமாகச் சமாளிப்பீர்கள். ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகப் பேசுங்கள்.
உத்திராடம் 1: நிலுவைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டிய சூழல் ஏற்படும். சாதாரணமாகச் செய்யும் விஷயங்கள் வீண் பழி தரக்கூடும். பெண்களின் பயம் நீங்கும்படியான மாற்றங்கள் நிகழும்.
சந்திராஷ்டமம்: 1.1.2021 காலை 6:00 - 2.1.2021 இரவு 8:43 மணி


மகரம்


கேது, சந்திரனால் நன்மை கிடைக்கும். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
உத்திராடம் 2,3,4: அலைச்சலுக்கு பிறகு கடினமான விஷயங்கள்கூட கைகூடும். பிள்ளைகளிடம் நிதானமாகப் பேசவும். பொழுது போக்கு காரணமாக பொறுப்புகளை புறக்கணிக்காதீர்.
திருவோணம்: சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். குடும்பத்தின் பிரதிநிதியாக சில விஷயங்கள் செய்வீர்கள். சக ஊழியர்கள், தொழில் கூட்டாளிகள் விஷயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது.
அவிட்டம் 1,2: குடும்பத்தில் சந்தோஷமும், நிம்மதியும் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களது பொறாமையால் சில அவதுாறுகளை சந்திக்க வேண்டி வரும்.

சந்திராஷ்டமம்: 2.1.2021 இரவு 8:44 - 4.1.2021 நள்ளிரவு 12:54 மணி


கும்பம்


சூரியன், செவ்வாய், அதிர்ஷ்ட பலன்களை வழங்குவர். மீனாட்சி வழிபாடு நன்மை தரும்.
அவிட்டம் 3,4: வழக்கு, விவகாரங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். பெண்கள் புதிய ஆடை, ஆபரணம் வாங்குவர். பணியாளர்களுக்கு பேச்சிலும், செயலிலும் நிதானம் தேவை.
சதயம்: நிதானமாகப் பேசி பிறரை அனுசரித்து செல்வது வெற்றிக்கு உதவும். பிரபல நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கும் வாய்ப்புண்டு. கடமைகளில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது.
பூரட்டாதி 1,2,3: கலைஞர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். திட்டமிட்டபடி விஷயங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். நேர்மையும், நிதானமும் பின்பற்றுவது அவசியம்.

சந்திராஷ்டமம்: 4.1.2021 நள்ளிரவு 12:55 - 6.1.2021 நள்ளிரவு 3:48 மணி


மீனம்


புதன், குரு, சனியால் அபரிமிதமான நன்மைகள் விளையும். பைரவர் வழிபாடு பல நன்மைகள் தரும்.
பூரட்டாதி 4: மனதில் உற்சாகம் பிறக்கும். அரசியல்வாதிகளுக்கு எடுத்த விஷயங்களில் வெற்றி ஏற்படும். பணியாளர்கள் கடினமான விஷயங்களை எளிதாக செய்து முடிப்பீர்கள்.
உத்திரட்டாதி: பணியாளர்களின் முயற்சியில் சிறு தடைகள் ஏற்படக்கூடும். சில சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது சங்கடம் ஏற்படுத்தும் உரையாடல்கள் நிகழும். எதிர்பாராத விஷயம் ஒன்று நடைபெறும்.
ரேவதி: விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் உங்களின் தொழிலில் முன்னேறுவீர்கள். புதிய துறை ஒன்றில் ஈடுபடும் ஆர்வம் ஏற்படும். அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: 6.1.2021 நள்ளிரவு 3:49 மணி - 7.1.2021 நாள் முழுவதும்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rengarajan,N - Usilampatti,இந்தியா
02-ஜன-202117:35:11 IST Report Abuse
Rengarajan,N Usilampatti
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
02-ஜன-202111:32:02 IST Report Abuse
ShivRam ShivShyam எல்லாருக்குமே நல்ல பலன், அனுகூலம், அதிர்ஷ்டம், அபரிமிதமான நன்மை, தாராளம் etc ??? ரொம்ப சந்தோசம் .. உலகம் மகிழ்ச்சியாக இருக்கும் அடுத்த வாரம் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X