தமிழகத்தில் சட்டம் சிறப்பாக உள்ளது: முதல்வர் பழனிசாமி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் சட்டம் சிறப்பாக உள்ளது: முதல்வர் பழனிசாமி

Updated : ஜன 02, 2021 | Added : ஜன 02, 2021 | கருத்துகள் (35)
Share
ராமநாதபுரம்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.ராமநாதபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: தமிழக அரசின் உதவியால் வியாபாரம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் ரூ.15 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தால், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏரிகள்
தமிழகம், முதல்வர், முதல்வர்பழனிசாமி, சட்டம்ஒழுங்கு, முதல்வர் இபிஎஸ், இபிஎஸ், எடப்பாடிபழனிசாமி, பழனிசாமி, வியாபாரிகள்

ராமநாதபுரம்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: தமிழக அரசின் உதவியால் வியாபாரம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் ரூ.15 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தால், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏரிகள் நிரம்பும். இந்த திட்டத்திற்கு டெண்டர் கொடுக்கப்பட்டு விட்டது. விரைவில் பணிகள் துவங்கும்.


latest tamil news


நாட்டிலேயே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. வியாபாரிகள் மனதில் உள்ளதை தெரிந்து கொள்ளவே நேரில் சென்று சந்திக்கிறேன். தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கை காரணமாக, தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களை ஒப்பிடுகையில் கட்டுக்குள் உள்ளது. ரூ.400 கோடியில், ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைய உள்ளது. தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு இணையான வசதி இங்கு அமைக்கப்படும். இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X