இன்றைய ' கிரைம் ரவுண்ட்அப் '

Updated : ஜன 02, 2021 | Added : ஜன 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
*ஆந்திராவில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட 23 தமிழர்கள் உட்பட 33 பேரை கடப்பா போலீசார் கைது செய்துள்ளனர். சர்வதேச கடத்தல்காரன் தஸ்தகிரியையும் கைது செய்த போலீசார், 6 கார்களில் எடுத்து செல்லப்பட்ட 48 செம்மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்தனர். * மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த புத்தாண்டு விழாவில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் 19 வயது மதிக்கத்தக்க பெண்
கிரைம் ரவுண்ட்அப், தற்கொலை,  பயங்கரவாதிகள், நகைவியாபாரி, கள்ளக்காதல்,

*ஆந்திராவில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட 23 தமிழர்கள் உட்பட 33 பேரை கடப்பா போலீசார் கைது செய்துள்ளனர். சர்வதேச கடத்தல்காரன் தஸ்தகிரியையும் கைது செய்த போலீசார், 6 கார்களில் எடுத்து செல்லப்பட்ட 48 செம்மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.
* மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த புத்தாண்டு விழாவில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் 19 வயது மதிக்கத்தக்க பெண் மாடியில் இருந்து விழுந்து இறந்தார். இதனையடுத்து 2 பேர் மீது கொலை வழக்குப்பதிவு.

* ஜம்மு காஷ்மீரில் இடம் வாங்கியதால் பயங்கரவாதிகள் நகை வியாபாரியை சுட்டு கொன்றதாக விசாரணையில் தகவல்.


தமிழகத்தின் நிகழ்வு


* ஆன்லைன் லோன் தருவதாக மோசடி செய்த சீனாவை சேர்ந்த 2 பேர் உள்பட 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

* செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளில் கத்தியை காட்டி மொபைல்போன் பறித்த திருடன் லட்சுமணன் கைது.

* செங்கல்பட்டு அருகே இளைஞர் அஜீத்குமார் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.

* மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியில் மொட்டைத்தலை, கைலியுடன் ஒருவர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மன நலம் பாதிக்ப்பட்டவராக இருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

* திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலை கணவன் கண்டித்ததால் , மனைவி புவனேஸ்வரி தூக்கு போட்டு தற்கொலை.


latest tamil news




* கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சியில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுமி தன்யாஸ்ரீ, அதிக பாரங்களை ஏற்றி வந்த டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


உலக நடப்பு


* 2006 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்ட அதி பயங்கரவாதி ஜக்கி உர் ரகுமான் பாகிஸ்தானில் கைது.

*மத்திய ஆப்ரிக்காவின் காங்கோ நாட்டில் நடந்த உள்நாட்டு போரில், பொது மக்கள் 25 பேரை கிளர்ச்சியாளர்கள் கொன்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANTONYRAJ - MADURAI,இந்தியா
02-ஜன-202116:35:03 IST Report Abuse
ANTONYRAJ தீவிரவாதிய பாகிஸ்தான்ல கைது பண்ணி என்ன பிரயோஜனம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X