போலீசாருடன் தகராறு- தி.மு.க.,வினர் கைது

Added : ஜன 02, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
வடவள்ளி: கோவையில், சாலையின் நடுவே நடப்பட்ட கட்சிக் கொடியை அகற்றக் கூறியதால், போலீசாருக்கும், தி.மு.க.,வினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.கோவை, தொண்டாமுத்தூர் பரமேஸ்வரன்பாளையத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்ளும், மக்கள் கிராம சபை கூட்டம் இன்று நடக்கிறது. இதையடுத்து, லாலி ரோடு முதல் தொண்டாமுத்துார் வரை, சாலையின் இரு புறமும், கட்சியின் விளம்பர பதாகைகளும், சாலை

வடவள்ளி: கோவையில், சாலையின் நடுவே நடப்பட்ட கட்சிக் கொடியை அகற்றக் கூறியதால், போலீசாருக்கும், தி.மு.க.,வினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
கோவை, தொண்டாமுத்தூர் பரமேஸ்வரன்பாளையத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்ளும், மக்கள் கிராம சபை கூட்டம் இன்று நடக்கிறது. இதையடுத்து, லாலி ரோடு முதல் தொண்டாமுத்துார் வரை, சாலையின் இரு புறமும், கட்சியின் விளம்பர பதாகைகளும், சாலை நடுவே உள்ள தடுப்புகளில், கொடிகளும் நடப்பட்டுள்ளன.வாகன ஓட்டிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், சாலையின் நடுவே கட்சி கொடிகள் இருப்பதால், அவற்றை அகற்ற போலீசார் கூறினர்.
இதை கண்டித்து தி.மு.க., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணன் தலைமையில், கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரம் மருதமலை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தி.மு.க.,வினர் 76 பேரை, சாய்பாபா காலனி போலீசார், கைது செய்தனர். பின், அப்பகுதியில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு, சாலையின் நடுவே இருந்த கட்சிக்கொடிகளை போலீசார் அகற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
லிங்கம்,சென்னை எதிர் கட்சியாக இருக்கும்போதே இம்மூட்டு அட்காசம்...இதுல ஆளும் கட்சியாக ஆயிட்டா....அம்மூட்டுத்தேன்...!!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X