நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம் காலை, 6:00 மணி முதல், பனிப்பொழிவு காணப்பட்டது. அதையடுத்து, மழை பெய்யத் துவங்கியது. இடைவிடாமல் பெய்யத்துவங்கிய மழையால், மக்கள் வெளியே செல்ல முடியாமல், வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும், வெளியே செல்லும் நிலையில், குடை பிடித்தபடியும், மழைக்கோட் அணிந்தும் சென்று வந்தனர். மாலை, 3:00 மணி வரை நீடித்த மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில், மழைநீர் வழிந்தோடியது. பருவமழையால், விவசாயிகள் மகிழ்ந்தனர். மாவட்டத்தில் பெய்த மழை (மி.மீ.,) விபரம் பின்வருமாறு: எருமப்பட்டி, 20, குமாரபாளையம், 6.40, மங்களபுரம், 36.20, மோகனூர், 15, நாமக்கல், 25, ப.வேலூர், 28, புதுச்சத்திரம், 19, ராசிபுரம், 18.20, சேந்தமங்கலம், 27, திருச்செங்கோடு, 17, கலெக்ட்ரேட், 19.50, கொல்லிமலை, 36 என, மொத்தம், 267.30 மி.மீ., பதிவானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE