குமாரபாளையம்: குமாரபாளையத்தில் உள்ள கோவில் நிலத்தில் தன்னார்வலர்கள் பலர் உழவாரப்பணி மேற்கொண்டனர். குமாரபாளையம், காவேரி நகர் காவிரி பாலம் அருகே லட்சுமிநாராயண சுவாமி கோவிலுக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. இங்கு அப்பகுதியினர் குப்பையை கொட்டி வந்தனர். அருகில், விநாயகர் கோவிலும் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் எதிரில் உள்ள குப்பையின் துர்நாற்றத்தால் முகம் சுளித்தனர். இதனை தவிர்க்க தன்னார்வலர்கள் பலர் ஒன்றிணைந்து உழவாரப்பணி குழுவை ஏற்படுத்தினர். அதன் சார்பில் அந்த கோவில் இடத்தில் இருந்த குப்பையை அகற்றி, பொக்லைன் உதவியுடன் தூய்மை செய்து வருகின்றனர். நேற்று, புத்தாண்டையொட்டி அந்த இடத்தில் அரளி, செம்பருத்தி உள்ளிட்ட பல பூச்செடிகள் நடப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE