நாமக்கல்: ராசிபுரம் அடுத்த அணைப்பாளையத்தை சேர்ந்த, இரண்டு பள்ளி மாணவியரை, ஒரு கும்பல், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக, ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார், வழக்கு பதிவு செய்து, நவ.,ல், 75 வயது முதியவர் உள்பட, 11 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அணைப்பாளையத்தை சேர்ந்த, தனியார் நிறுவன ஊழியர் கோகுலகிருஷ்ணன், 21, என்பவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., சக்தி கணேசன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று, கலெக்டர் மெகராஜ், கோகுலகிருஷ்ணனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான நகல், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோகுலகிருஷ்ணனிடம், ராசிபுரம் போலீசார் நேற்று ஒப்படைத்தனர். ஏற்கனவே, இந்த வழக்கில், ஏழு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE