குளித்தலை: குளித்தலை அடுத்த, புழுதேரியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் மற்றும் வேளாண் அறிவியல் மையத்தின் சார்பாக, வயல்வெளி தின விழா கொசூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தொழில்நுட்ப வல்லுனர்கள் திருமுருகன், தமிழ்ச்செல்வி ஆகியோர், புதிய நெல் ரகமான ஆடுதுறை- 53, கோ- 51 குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். தொழில் நுட்ப வல்லுனர் தமிழ்ச்செல்வி பேசியதாவது: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பிபிடி -5204 ஆந்திரா பொன்னி என்ற நெல் ரகத்தினை விவசாயிகள் அதிகமாக பயிரிட்டு வந்தனர். இந்த ரகத்தில் அனைத்து விதமான நோய், பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்து வந்தது. இதனால் சாகுபடி செலவு அதிகரித்ததோடு, குறைவான மகசூலை விவசாயிகள் ஈட்டக்கூடிய சூழல் ஏற்பட்டது. மேலும் அதிகமான ரசாயன உரங்கள், பூச்சி, பூஞ்சாணக் கொல்லி மருந்துகள் தெளிக்க வேண்டிய நிலை உருவானது. இதை கருத்தில் கொண்டு புழுதேரி வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் விவசாயிகள் மத்தியில் கிராமம் வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE