சேதமடைந்த நிலையில் சிமென்ட் மின் கம்பங்கள்

Added : ஜன 02, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், சிமென்ட் மின் கம்பங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. மறுபுறம் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சிய போக்கால், சாலையில் போடப்பட்டுள்ள, புதிய மின் கம்பங்கள், சேதமடையும், அவல நிலை ஏற்பட்டுள்ளது.கரூர் நகராட்சியில் உள்ள, 48 வார்டுகள் மற்றும் நகரை சுற்றியுள்ள சின்ன ஆண்டாங்கோவில், காதப்பாறை பஞ்சாயத்துகளில், பல இடங்களில் சிமென்ட்

கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், சிமென்ட் மின் கம்பங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. மறுபுறம் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சிய போக்கால், சாலையில் போடப்பட்டுள்ள, புதிய மின் கம்பங்கள், சேதமடையும், அவல நிலை ஏற்பட்டுள்ளது.


கரூர் நகராட்சியில் உள்ள, 48 வார்டுகள் மற்றும் நகரை சுற்றியுள்ள சின்ன ஆண்டாங்கோவில், காதப்பாறை பஞ்சாயத்துகளில், பல இடங்களில் சிமென்ட் மின் கம்பங்களில், கான்கிரீட் இரும்பு கம்பிகள் வெளியே தெரியுமளவுக்கு உள்ளது. ஒரு சில இடங்களில், பல மின் இணைப்புகளை வழங்கி வரும், மின்மாற்றிகளின் சிமென்ட் கம்பங்களும் சேதமடைந்துள்ளன. எந்நேரமும் இத்தகைய கம்பங்கள், இடிந்து விழும் அபாயம் உள்ளது. இந்நிலையில், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், புதிய சிமென்ட் மின் கம்பங்கள் சாலையோரம் வைக்கப்பட்டுள்ளன. அதை குறிப்பிட்ட நாளில் எடுத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர, மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். இதனால், தரையில் போடப்பட்டுள்ள, நூற்றுக்கணக்கான, புதிய சிமென்ட் மின் கம்பங்கள் மழையில் நனைந்து வீணாகின்றன. பல இடங்களில் போடப்பட்டுள்ள, புதிய சிமென்ட் கம்பங்கள் உடைந்துள்ளன. அதன் மேல் குப்பையும் கொட்டுவதால், சேதமடையும் நிலையில் உள்ளன. இதனால், பொதுமக்களின் வரிப்பணம், மின் வாரிய துறை அதிகாரிகளால் வீணடிக்கப்படுகிறது. எனவே, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடியும் நிலையில் உள்ள, சிமென்ட் மின் கம்பங்களை மாற்றி, புதிய மின் கம்பங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X