கரூர்: கரூர் அருகே குழாய் உடைந்து, குடிநீர் சாக்கடை கால்வாயில் சென்றது. இதனால், அப்பகுதியை சேர்ந்த மக்கள் அதிருப்தியடைந்தனர்.
தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன், ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்தில், ஸ்டேட் பாங்க் காலனி உள்ளது. கரூர் நகராட்சி பகுதியையொட்டியுள்ள, ஸ்டேட் பாங்க் காலனி, ஆண்டாங்கோவில் சாலையில் ஏராளமான வீடுகள், ஓட்டல்கள், டீக்கடை, மளிகை கடைகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் உள்ள குழாய் உடைந்து குடிநீர் சாலையில் ஓடியது. இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்தவர்கள், பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால், நேற்று காலை வரை குழாய் உடைப்பு சரி செய்யப்படாததால், குடிநீர் வீணாக சாக்கடை கால்வாயில் சென்றது. இதனால், மக்கள் கடும் அதிருப்தியடைந்தனர். குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில், குழாய் உடைப்பை சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க, ஆண்டாங்கோவில் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE