சென்னை: நான்கு அல்லது ஐந்து நாட்களில், முதல்வர் வேட்பாளர் குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும் என பா.ஜ.,வை சேர்ந்த குஷ்பு கூறியுள்ளார்.
சென்னை புதுப்பேட்டையில் நிருபர்களை சந்தித்த பாஜ., நிர்வாகி குஷ்பு கூறியதாவது: சட்டசபை தேர்தலில் கூட்டணி என தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சிடி ரவி கூறியுள்ளார். அதிமுக உடன் தான் கூட்டணி என, உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது தெளிவுபடுத்தியுள்ளார். முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்று கொண்டுள்ளோம். பா.ஜ., மரபு அடிப்படையில், எப்போது அறிவிக்க வேண்டுமே அப்போது அறிவிப்போம். முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்று கொள்ள முடியாது என பா.ஜ.,வில் யாரும் சொல்லவில்லை.

முதல்வர் வேட்பாளர் குறித்து தலைவர்கள் பேசி முடிவு எடுப்பார்கள். முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து 4, 5 நாட்களில் தேஜ கூட்டணி அறிவிக்கும். 2021 சட்டசபை தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி தயாராக உள்ளாரா? யார் வேண்டுமானாலும் பா.ஜ.,விற்கு ஆதரவு தரலாம். தனக்கு பா.ஜ., தேவையா , யாருக்கு ஓட்டு, ஆதரவு என்பதை ரஜினி தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE