கோல்கட்டா: கோல்கட்டா: பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 48. கடந்த 2003ல் நடந்த ஐ.சி.சி., உலக கோப்பையில் இந்திய அணியை பைனலுக்கு அழைத்துச் சென்ற இவர், 113 டெஸ்ட், 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார்.
கடந்த 2019ல் இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இவர், கோல்கட்டா வீட்டில் உள்ள 'ஜிம்மில்' பயிற்சி செய்த போது நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக கோல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு 'ஆன்ஜியோபிளாஸ்டி' சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை ஸ்திரமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் , மே.வங்க கவர்னர் ஜெக்தீப் தங்கார், முதல்வர் மம்தாபானர்ஜி, பிசிசிஐ செயலர் உள்ளிட்ட பலர், அவர் விரைவில் குணமாக வேண்டும் என வாழ்த்து தெரிவித்தனர். டுவிட்டரிலும், கங்குலி விரைவில் குணமாக வேண்டி கருத்துகளை பதிவிட்டதை தொடர்ந்து ‛‛ SouravGanguly'' என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE