யுரேனிய சோதனையை 20% அதிகரிக்கக் கோரும் ஈரான்; பீதியில் அமெரிக்கா..!

Updated : ஜன 02, 2021 | Added : ஜன 02, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
டெஹ்ரான்: ஈரானும் அமெரிக்காவும் அவ்வப்போது மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஈரான் புரட்சிகர ராணுவப் படைத் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்கப் படைகள் கொல்லப்பட்டார். இதனையடுத்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் மோதல் அதிகரித்தது. ஈரான் மறைமுகமாக அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக அளவில் அணுஆயுத சோதனை மேற்கொண்டு வருகிறது என்று அமெரிக்கா குற்றம்
ஈரோன், அணுஆயுதம், யுரேனியம், சோதனை, அமெரிக்கா,

டெஹ்ரான்: ஈரானும் அமெரிக்காவும் அவ்வப்போது மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஈரான் புரட்சிகர ராணுவப் படைத் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்கப் படைகள் கொல்லப்பட்டார். இதனையடுத்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் மோதல் அதிகரித்தது. ஈரான் மறைமுகமாக அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக அளவில் அணுஆயுத சோதனை மேற்கொண்டு வருகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது.

ஈரான் அணு ஆயுத சோதனையை கட்டுப்படுத்த அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் இடவுள்ளது. சர்வதேச அணு ஆயுத சோதனை அமைப்பிடம் கடந்த வெள்ளியன்று ஈரான் தனது அணு ஆயுத சோதனையை தனது சோதனையில் 20 சதவீதம் அதிகரிக்க விண்ணப்பித்துள்ளது.

யுரேனியத்தை குறிப்பிட்ட அளவு சோதனை செய்துகொள்ள இந்த அமைப்பு தனது உறுப்பு நாடுகளுக்கு அனுமதி வழங்குகிறது. அந்த அளவை மீறி சென்றால் தான் உலக அமைதிக்கு ஆபத்து என்றும் அணு ஆயுத போர் மூளும் அபாயம் ஏற்படும் என்றும் நம்புகிறது. ஆனால் அவ்வப்போது அமெரிக்காவும் ஈரானும் வெளியுலகத்துக்கு தெரியாமல் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக யுரேனியத்தை சோதனை செய்ததாக கூறப்படுகிறது.

சர்வதேச அணு ஆயுத கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் முன்னிலையிலேயே ஈரானின் யுரேனியம் சோதனை நடத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தின. ஈரானில் உள்ள போர்டோ யுரேனிய ஆராய்ச்சி தளத்தின் புகைப்படங்கள் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளி உலகுக்கு வெளியிடப்பட்டன.


latest tamil news


மலைகளால் சூழப்பட்ட இந்த பகுதிகள் ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவுக்கு பெரியது. இங்கு அணுஆயுத சோதனையுடன் ஈரான் ராணுவப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறதா என்று அமெரிக்கா சந்தேகித்தது. ஈரானின் அணு ஆயுத சோதனை கடந்து 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தத்திற்குப் பிறகு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அமெரிக்கா சற்று ஆறுதல் அடைந்தது. ஆனால் தற்போது ஈரான் யூரேனிய ஆராய்ச்சியை 20 சதவீதம் அதிகரிக்கக் கோருவது அமெரிக்காவை சற்று பீதியடையச் செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Columbus -  ( Posted via: Dinamalar Android App )
02-ஜன-202121:17:14 IST Report Abuse
Columbus Good comment. Mr Anthony Raj. 👌👌
Rate this:
Cancel
Arul Narayanan - Hyderabad,இந்தியா
02-ஜன-202120:49:29 IST Report Abuse
Arul Narayanan Please don't post such unthoughtful comments. Iran is our frily nation even during BJP rule. It always supports India on several issues including Kashmir and has lot of problems with Pakistan also. But India is forced to move away because of Trump's pressure politics.
Rate this:
Cancel
ANTONYRAJ - MADURAI,இந்தியா
02-ஜன-202120:41:27 IST Report Abuse
ANTONYRAJ (நீங்கள் சொல்வது போல் பீதியெல்லாம் ஒண்ணுமில்லை.) இன்னும் ஓரிரு நாட்களில் ஈரானின் ராணுவ தளபதி சுலைமானி கொல்லபட்டு ஒரு வருடம் ஆகும் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நடைபெற இருக்கும் நிலையில், மத்தியகிழக்கில் பெரும் பதற்றம் அதிகரித்திருகின்றது. டிரம்ப்புக்கு இன்னும் 18 நாட்களே பதவி இருக்கும் நிலையில் அமெரிக்காவின் மாபெரும் போர்கப்பல்களும் இன்னும் பல நவீன கடல் வாகனங்களுடன் அங்கு போருக்கு தயார் என நிற்கின்றது. இஸ்ரேல் தன் நீர்மூழ்கியினை கடலுக்கு மேலே மிதக்கவிட்டு ஈரான் பக்கம் வந்து, இதோ வந்துட்டேன் என கடுப்பேற்றுகின்றது. விஷயம் என்னவென்றால் சுலைமானிசாவுக்கு பழிவாங்க என ஈரான் தத்து பித்துன்னு எதையாவது செய்தால் ஈரானை குதறிவிடுவோம் என எச்சரிக்கின்றது அமெரிக்காவும் இஸ்ரேலும். ஈரான் கடந்த சில வருடங்களாக கடுமையான மிரட்டல் விட்டுக் கொண்டிருந்தது,எங்களை தொட்டால் அரேபியாவினை எரிப்போம், நினைத்து பார்க்கமுடியாத அழிவினை கொடுப்ப்போம் என்றெல்லாம் பெரும் சூளூரை உரைத்துக் கொண்டிருந்தது. ஆனால் சுலைமானி கொல்லப் பட்ட பொழுது ஆளில்லா இடத்தில் சில மொக்கை ஏவுகனைகளை வீசியதோடு அமைதியானது.சில மாதங்களுக்கு முன் ஈரானின் அணு விஞ்ஞானியும் கொல்லபட்ட நிலையிலும் வெறும் உதார் எச்சரிக்கையோடு நின்றுவிட்டது. இப்பொழுது ஈரான் ஒரு சீனிவெடியினை வெடித்தால் கூட அதை நொறுக்கும் வெறியில் அமெரிக்கா நிற்கின்றது. பதவியை விட்டு போகுமுன் ஒரு தீபாவளியை கொண்டாட துடிக்கின்றார் டிரம்ப். ஆனால் ஈரானின் அமைதி பெரும் சந்தேகமானது, நாளையே பிடன் வந்தாலும் ஈரானோடு அவர் கொஞ்சி குலாவ போவதில்லை, அப்படியே குலாவினாலும் சுலைமானிக்கும் அணுவிஞ்ஞானிக்கும் பழியெடுத்தால் விளைவு சிக்கல்தான் இதனால் சுலைமானியினையும், அணுவிஞ்ஞானியினையும் மறந்தேவிடும் முடிவுக்கு ஈரான் வந்திருக்கலாம். ஈரானின் பலம் இவ்வளவுதானா என்ற அளவு யூகங்கள் எழுகின்றன? இப்பொழுது ஈரானை இஸ்ரேல் அடித்தாலும் வழக்கம் போல் எச்சரிப்பார்கள், அடிக்க அடிக்க எச்சரித்து கொண்டே இருப்பார்கள், அவர்களால் அவ்வளவுதான் முடியும். ஆக அடைந்தால் திராவிடநாடு இல்லையென்றால் சுடுகாடு என்று கூறி வெறும் வெற்று வேட்டு சவுடாலை விட்டு கொண்டிருந்த நம் திராவிட நாட்டு வீரர்களான பெரியார், அண்ணா,அப்றம் இந்த கட்டுமர கருணாநிதி வரிசையில் ஈரானும் சேர்ந்து கொண்டதுதான் பரிதாபம்.
Rate this:
elakkumanan - Naifaru,மாலத்தீவு
02-ஜன-202122:13:45 IST Report Abuse
elakkumananசூப்பர் நண்பா.........அந்த கடைசி வரி..............தரமான ஒப்பீடு நண்பா..............வடிவேலு இன் ஹாலிவுட் .........................
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X