திருநெல்வேலி: நெல்லையில் த.மா.கா., தலைவர் வாசன் கூறியதாவது: அதிமுகவுடனான எங்களது கூட்டணி தொடரும். எங்களது பலத்திற்கு ஏற்ப அதிமுக கூட்டணியில் தொகுதியை பெற்று கொள்வோம். பாஜவை தவிர வேறு எந்த கட்சியும் எங்களுக்கு இத்தனை சீட்டுகள் தர வேண்டும் என அறிவிக்கவில்லை. எங்கள் கூட்டணியின் அதிகாரப்பூர்வ முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான். எங்கள் கூட்டணி நல்லவர்கள் கூட்டணி. அதனால், ரஜினி எங்கள் கூட்டணியை ஆதரிக்க வேண்டும். அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணி. திமுக கூட்டணி தோல்வியை தழுவும் கூட்டணி . சட்டசபையில் த.மா.கா.,வின் குரல் ஒலிக்க வேண்டும். ரூ.2,500 பொங்கல் பரிசு வழங்குவதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களின் தோல்வி பயத்தை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE