அறிவியல் ஆயிரம்
ஞாபக மறதி
கர்ப்ப காலத்தின் போது ரத்த அழுத்த பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள், எதிர்காலத்தில் ஞாபக மறதி பிரச்னைக்கு ஆளாகும் வாய்ப்புள்ளது என நெதர்லாந்து விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன் குழந்தை பெற்ற, 596 பெண்களிடம் அவர்களது எண்ணங்கள், ஞாபக சக்தி திறன் குறித்து ஆய்வு நடந்தது. இதில் 80 பேருக்கு கர்ப்பத்தின் போது 20 வாரங்களுக்குப்பின் ரத்த அழுத்த பிரச்னை இருந்தது. ஆய்வு முடிவில் மற்றவர்களை விட, இவர்களுக்கு மட்டும் ஞாபக திறன் குறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தகவல் சுரங்கம்
பிரதமர்களின் பல்கலை
ஆங்கிலம் பேசும் நாடுகளில் பழமையான பல்கலை என அழைக்கப்படுவது பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலை. இது 1096ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பிரிட்டனின் 28 பிரதமர்கள், இப்பல்கலையின் முன்னாள் மாணவர்கள். உலகில் 2020 அக்., கணக்கின் படி, இப்பல்கலையில் படித்த 72 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர். ஒலிம்பிக்கில் 160 பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர். 39 கல்லுாரிகள் இதன் கீழ் செயல்படுகின்றன. 24,515 மாணவர்கள் படிக்கின்றனர். 7000 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இப்பல்கலை சார்பில் உலகின் பழமையான மியூசியம் செயல்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE