உலகமே கொரோனாவில் தத்தளித்த சமயத்தில் பெரும் லாபம் ஈட்டிய அமெரிக்க செல்வந்தர்கள்

Updated : ஜன 02, 2021 | Added : ஜன 02, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
அமெரிக்க ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானின் நிறுவனர் ஜெப் பெசோஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனமான டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் ஆகியோர் உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னணி வகிப்பவர்கள் அவர். இவர்கள் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் நிதி ஈட்டியுள்ளதாக

அமெரிக்க ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானின் நிறுவனர் ஜெப் பெசோஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனமான டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் ஆகியோர் உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னணி வகிப்பவர்கள் அவர்.latest tamil newsஇவர்கள் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் நிதி ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. இங்கு இதுவரை 3 லட்சத்து 45 ஆயிரம்பேர் பலியாகி உள்ளனர். கிட்டத்தட்ட 2 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர். இந்த பாதிப்பில் இருந்து மீள பிரபல தொழில் அதிபர்கள் தங்களது தொண்டு நிறுவனங்கள் மூலம் அமெரிக்க அரசுக்கு உதவி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க தொழில் ஜாம்பவான்களான ஜெப் பெசோஸ் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் கடந்த ஆண்டு வைரஸ் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் செல்வம் ஈட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் நடுத்தர வர்க்கத்தினர் பலர் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் நிலையில் இந்த இரு பெரும் தொழிலதிபர்கள் எவ்வாறு பணம் ஈட்டினார்கள் என்று சந்தேகம் எழும். அதற்கு வைரஸ் தாக்கம்தான் காரணம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம்..! வைரஸ் தாக்கம் காரணமாக அமேசான் உட்பட பல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அன்றாட உபயோகப் பொருட்களான காய்கறி, பழங்கள், மளிகை சாமான்கள் உள்ளிட்டவற்றை தங்களது ஆன்லைன் மார்க்கெட்டில் விற்கத் துவங்கின. இதனால் பொதுமக்கள் சூப்பர் மார்க்கெட்டுக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை.


latest tamil newsஅனைத்து சாமான்களும் டோர் டெலிவரி செய்யப்பட்டன. இதனால் அமேசானின் லாபம் 70 சதவீதம் அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதேபோன்று டெஸ்லா நிறுவனம் சீனாவின் ஷாங்காய் பகுதியில் தனது கிடங்கில் கடந்த ஆண்டு ஆர்டர்கள் அதிகரித்ததன் பெயரில் அதிக அளவில் மின்சார வாகனங்களை தயாரித்து விநியோகம் விட்டதாக கூறுகிறது.

உலகம் முழுவதும் பெட்ரோல் வாகனங்களின் விற்பனை வெகுவாக சரிந்த கடந்த ஆண்டில், டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் விற்பனை வழக்கம்போல அதிகமாகவே இருந்து வந்துள்ளது. இதன்காரணமாக தற்போது ராக்ஃபெல்லர் உள்ளிட்ட தொழிலதிபர்கள் அமெரிக்காவில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் செல்வம் ஈட்டியதுபோல இந்த இரு தொழிலதிபர்களும் செல்வம் ஈட்டத் தொடங்கிவிட்டனர் எனக் கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஜன-202112:14:34 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு நான் ஒரு டீம்கா அடிமை செய்தியின் தலைப்பை "பாதி மட்டும்" படித்து விட்டு இந்த செய்தியில் அம்பானி, அதானி பற்றி அவதூறு பேச ஏதாவது கிடைக்கும் என்று நம்பி ஏமாந்தேன்
Rate this:
Balaji - Chennai,இந்தியா
03-ஜன-202115:04:29 IST Report Abuse
Balajiஒருத்தர் சிங்கப்பூர்லேந்து மணி அடிச்சுட்டார் அந்த மாட்டார்களா.. இல்லேன்னா நமக்கு தூக்கம் வராதே.. ஹி ஹி......
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
03-ஜன-202111:10:05 IST Report Abuse
vbs manian புத்தி திறமை ஜெயித்தார்கள் எதற்காக பொறாமை.
Rate this:
Cancel
prabhaharan.v - kovilpatti,இந்தியா
03-ஜன-202108:34:52 IST Report Abuse
prabhaharan.v விஷ்ணு பகவானின் சுதர்சனசக்கரம் இவர்களின் வளர்ச்சிக்கான அடையாளம். மனித இனம் அனைத்தும் சக்கரத்தில்(பணம்) சிக்கி தவிக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X