சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

வாரிசுகளுக்கு கட்சிப்பதவி; மா.செ., தாராளம்!

Added : ஜன 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாரிசுகளுக்கு கட்சிப்பதவி; மா.செ., தாராளம்!''தேர்தல் வேலை ஏன் செய்யணுமுன்னு, அதிருப்தியில இருக்காங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.''ஏன், என்ன விவகாரமுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''தி.மு.க.,வுல அமைப்பு ரீதியாக, சமீபத்துல கோவை, சென்னை, பொள்ளாச்சி, திருப்பூர், திருவள்ளூர் உட்பட, 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களைப் பிரிச்சு, புதிய

டீ கடை பெஞ்ச்

வாரிசுகளுக்கு கட்சிப்பதவ


ி;

மா.செ., தாராளம்!

''தேர்தல் வேலை ஏன் செய்யணுமுன்னு, அதிருப்தியில இருக்காங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.

''ஏன், என்ன விவகாரமுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''தி.மு.க.,வுல அமைப்பு ரீதியாக, சமீபத்துல கோவை, சென்னை, பொள்ளாச்சி, திருப்பூர், திருவள்ளூர் உட்பட, 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களைப் பிரிச்சு, புதிய மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை
நியமிச்சாங்க பா...

''இந்த பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் பதவிக்கு, நபர்களை தேர்ந்தெடுத்து, பரிந்துரை பண்ணியிருக்காங்க... ஆனா, அறிவாலயத்துல இருக்குற நிர்வாகியும், அவருடைய டாக்டர் வாரிசும் கூட்டணி அமைச்சு, தங்களுக்கு வேண்டிய நபர்களை, அந்த பட்டியலில் இணைச்சிடுறாங்களாம் பா...

''இதனால அதிருப்தியில இருக்குற மாவட்ட பொறுப்பாளர்கள், நாம் எதுக்கு தேர்தல் பணி செய்யணுமுன்னு, அதிருப்தியில இருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
அப்போது, கடைக்கு வந்த நபரிடம், ''ஜெயகுமார், அருண் எல்லாம், லண்டன்ல நல்லபடியா இருக்காளா ஓய்...'' என விசாரித்தார், குப்பண்ணா.

''போஸ்டர் ஒட்டாத குறையா, ஒரு அதிகாரிய தேடிகிட்டு இருக்காவ வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.

''யாரை, எதுக்குங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''நீலகிரி மாவட்டத்துல கட்டட அனுமதிக்கு, 'அப்ளை' பண்ணுறவங்களை, ரொம்ப அலைய விடுதாவ வே...

''கட்டடம் கட்டணுமுன்னா வனம், விவசாயம், சுரங்க துறைகளிடம், என்.ஓ.சி., வாங்கணும்... இதுக்காக பொதுமக்கள் விண்ணப்பிச்சா, உரிய அதிகாரிகள் பதில் சொல்ல மாட்டேங்காவ வே...

''புவியியல் மற்றும் சுரங்க துறை அனுமதிக்காக வந்த விண்ணப்பங்கள், மலைபோல சேர்ந்திருக்கு... அதையெல்லாம் ஆய்வு செஞ்சு, என்.ஓ.சி., கொடுக்குறதுக்கு, அந்த மாவட்டத்துக்கு ஒரே ஓர் அதிகாரி தான் இருக்காரு வே...

''அவரை நேரில் பார்க்கவும் முடியல, மொபைல் போன்ல பிடிக்கவும் முடியலை... பொதுமக்கள் அவரை, 'காணவில்லை'ன்னு போஸ்டர் அடிக்காத குறையா தேடிகிட்டு இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

''சுவாமிமலைக்கு போய், முருகனை தரிசிக்கணும் ஓய்...'' என, தனக்குத் தானே சொல்லிக்கொண்ட குப்பண்ணா, ''வாரிசுகளுக்கு, பதவிகளை அள்ளி கொடுத்திருக்கார் ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார்.

''என்ன, தி.மு.க., கதையா பா...'' என்றார், அன்வர்பாய்.

''அதான் இல்லை... திருவள்ளூர் கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க.,வுல பல பதவிகளுக்கு, சமீபத்துல புதிய நிர்வாகிகளை நியமனம் செஞ்சா ஓய்...

''மாவட்டச் செயலர் மூர்த்தி, தன் மூத்த மகனுக்கு, மாதவரம் கிழக்கு பகுதி செயலர் பதவியையும்; இளைய மகனுக்கு, மாவட்ட வக்கீல் பிரிவு இணைச் செயலர் பதவியையும் கொடுத்திருக்கார் ஓய்...

''இதுமட்டுமில்லாம, தன் ஜாதிக்காரா, சொந்தக்காராளுக்கு கட்சிப் பதவியை அள்ளி கொடுத்துருக்கார்ன்னு, அக்கட்சிக்காரா புலம்புறா ஓய்...

''இதனால அதிருப்தியடைஞ்ச கட்சிக்காரர்கள் சிலர், மாவட்டச் செயலருக்கு எதிரா, போஸ்டர் அடிச்சி ஒட்டி இருக்கா... தேர்தல் நேரத்துல இதெல்லாம் தேவையா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.


'சேம் சைடு கோல்' போடும் செந்தில் பாலாஜி!''இரண்டு எம். எல். ஏ.,க் கள் மேல, மக்கள் கடும் அதிருப்தியில இருக்கா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.

''எந்த தொகுதியில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, இடைத்தேர்தல்ல ஜெயிச்சவர்... தொகுதி மக்களை பார்க்கறதே இல்லை ஓய்...

''பா.ம.க.,காராளோட ஈஷிண்டு இருக்கறவர், சொந்தக் கட்சியினரை லவலேசமும் மதிக்கறதே கிடையாதாம்... இதனால, மறுபடியும் இந்த தொகுதியில நின்னா, ஜெயிக்கறது சிரமம்கறதால, தர்மபுரிக்கு தாவிடலாம்னு, காய் நகர்த்திண்டு இருக்கார் ஓய்...

''இதே மாதிரி, அரூர் - தனி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்ல ஜெயிச்ச, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமாரும், கட்சியினருக்கு எதையும் செய்யலைன்னு புகார் சொல்றா...

''அதுவும் இல்லாம, தீர்த்தமலை துவக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர், ஒன்றிய இலக்கிய அணி செயலர், அரூர் வடக்கு ஒன்றிய செயலர்னு பல பொறுப்புகளை இவரே வச்சுண்டு இருக்கறதும், இவர் மேல அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கு... 'இதனால, அரூர்ல இவருக்கு மறுபடியும் சீட் தந்தா, வெற்றி சிரமம்தான்'னு கட்சிக்காராளே சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''மதுரை கலெக்டர் அன்பழகன் ரொம்பவே வித்தியாசமானவரா இருக்காருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''சமீபத்துல, பணி ஓய்வு பெற்ற தன் டிரைவரை, தன் கார் பின் சீட்ல உட்கார வச்சு, தானே காரை ஓட்டி, வீட்டுல கொண்டு போய் விட்டார்... சில நாட்களுக்கு முன்ன, மனு தர வந்த மூதாட்டியை, தன் கார்ல ஏத்திட்டு போய், வீட்டுல விட்டாருங்க...

''அதே மாதிரி, தன்னிடம் மனு கொடுக்க வர்ற, ஏழை, எளிய மக்களுக்கு, தன் கை பணம், ஆயிரம், இரண்டாயிரத்தை குடுத்து அனுப்புறார்... இது வெளியே தெரிஞ்சா, கூட்டம் கூடிடும்கிறதால, சத்தமில்லாம உதவி செய்து அனுப்பிடுறாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''சொந்தக் கட்சி திட்டத்தையே எதிர்க்கிறாரேன்னு புலம்புறாங்க பா...'' என, கடைசி மேட்டரை கையில் எடுத்தார், அன்வர்பாய்.

''யாருவே அது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
'
'தி.மு.க., ஆட்சியில, 2009ல, கரூர் புதிய பஸ் ஸ்டாண்டை, தோரணக்கல்பட்டியில் அமைக்கணும்னு, தாந்தோன்றிமலை நகராட்சியில தீர்மானம் நிறைவேற்றினாங்க... அப்புறமா, 2013ல, அ.தி.மு.க., ஆட்சியில, போக்குவரத்து துறை அமைச்சரா செந்தில் பாலாஜி இருந்தாரு பா...

''அப்ப, கருப்பம்பாளையத்துல தனியார் தானமாக வழங்கிய இடத்துல, பஸ் ஸ்டாண்ட் கொண்டு வர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது... பல குளறுபடிகளுக்கு பிறகு, இப்ப மறுபடியும் தோரணக்கல்பட்டியில பஸ் ஸ்டாண்ட் பணியை துவங்கியிருக்காங்க...

''ஆனா, இதை செந்தில் பாலாஜி எதிர்க்கிறாரு... 'தி.மு.க., ஆட்சியில கொண்டு வந்த திட்டத்தை, இப்ப, அதே கட்சியில இருக்கிறவர் எதிர்க்கிறது சரியா'ன்னு, கட்சியினர் புலம்பிட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
நாயர் கல்லாவை நோக்கி நகர, பெரியவர்கள் நடையை கட்டினர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
03-ஜன-202106:20:10 IST Report Abuse
D.Ambujavalli இப்படி பொது மக்களுக்கு ஆதரவாக இருப்பதும், தனது டிரைவருக்கும் மரியாதை செய்வதும் பரந்த மனமுடைய சிலருக்கே உள்ள குணம். வாழ்த்துக்கள் ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X