ஜன., 3, 1972
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த மேலைப்பெருமழை என்ற ஊரில், 1909 செப்., 5ம் தேதி பிறந்தவர், பொ.வே.சோமசுந்தரனார். திண்ணைப் பள்ளியில், தமிழ் கற்றார். குடும்பச் சூழல் காரணமாக, கல்வி கற்க முடியவில்லை. ஆனாலும், சுயமாகக் கல்வி பயின்று, கவிதை எழுத ஆரம்பித்தார். சிலரின் உதவியால், அண்ணாமலை பல்கலையில், முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று, புலவர் பட்டம் பெற்றார்.'நற்றிணை, குறுந்தொகை, அகநானுாறு, மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி, உதயண குமாரகாவியம், நீலகேசி, பரிபாடல், பெருங்கதை' உள்ளிட்ட ஏராளமான நுால்களுக்கு உரை எழுதினார். கவிஞர், உரைநடையாசிரியர், நாடகாசிரியர், பாடலாசிரியர் என, பன்முக திறன் படைத்தவராக விளங்கினார். 1972 ஜன., 3ல், தன், 63வது வயதில் இயற்கை எய்தினார்.
'பெருமழைப் புலவர்' பொ.வே.சோமசுந்தரனார் காலமான தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE