பொது செய்தி

தமிழ்நாடு

இட ஒதுக்கீட்டை சிதைக்க முயற்சி: பா.ம.க.,ராமதாஸ் கண்டனம்

Updated : ஜன 03, 2021 | Added : ஜன 02, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
சென்னை:திருச்சி பாரதிதாசன் பல்கலை.,யில் உயர்கல்வித்துறை செயலர் புகுத்த முயன்ற இட ஒதுக்கீட்டு முறை நடவடிக்கையை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. உடனடியாக அவரை மத்தியஅரசு பணிக்கு மாற்ற வேண்டும் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: பல்கலைகழகங்களின் ஒவ்வொரு

சென்னை:திருச்சி பாரதிதாசன் பல்கலை.,யில் உயர்கல்வித்துறை செயலர் புகுத்த முயன்ற இட ஒதுக்கீட்டு முறை நடவடிக்கையை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. உடனடியாக அவரை மத்தியஅரசு பணிக்கு மாற்ற வேண்டும் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.latest tamil newsஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:

பல்கலைகழகங்களின் ஒவ்வொரு துறையும் ஓர் அலகாக கருதப்பட்டு அதற்குள் 69 சதவீத இடஒதுக்கீடு 200 புள்ளி ரோஸ்டர் முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக ஆட் தேர்வு அறிக்கையில் ஒட்டுமொத்த பல்கலைகழகமும் ஓர் அலகாக கருதப்பட்டு 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தான் இட ஒதுக்கீடு முறையை மாற்றுவதற்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். இது தவறு என பா.ம.க., கண்டனம் தெரிவித்திருந்தது.

பல்கலைகழகங்களில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் போது ஒவ்வொரு துறையும் ஓர் அலகாக கருதி 69 சதவீத இட ஒதுக்கீடு செயல்படுத்த வேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடு. மத்திய அரசின் பல்கலைகழகங்களை பொறுத்த வரையில் ஒட்டுமொத்த பல்கலைகழகத்தையும் ஓர் அலகாக கருதி இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்த வேண்டும் என சில ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகம் மாநிலபல்கலைகழகம் என்பதால் அவை மாநில அரசின் கொள்கையை தான் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா மாநில அரசின் ஒப்புதலை பெறாமல் பாரதிதாசன் பல்கலை.,பணி நியமனத்தில் மத்தியஅரசின் இட ஒதுக்கீட்டு கொள்கை முறையை கடைபிடிக்க உத்தரவிட்டது தவறாகும்.


இது குறித்து நான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து பேராசிரியர் நியமன நடைமுறை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசை பின்பற்றி ஒட்டு மொத்த பல்கலைகழகத்தையும் ஒரே அலகாக கருதி பேராசிரியர்களை நியமிக்க கடந்தாண்டு மே 28 ம் தேதி மீண்டும் ஆணையிட்டார்.

இதனையடுத்து பல்கலை கழக ஆசிரியர்கள் சங்க பொது செயலாளர் திருச்சி பாலமுருகன் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கிருஷ்ணன்ராமசாமி திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகம் மத்திய பல்கலைகழகம் அல்ல. அது மத்திய அரசிடம் இருந்து எந்த நிதியுதவியும் பெற வில்லை. அவை மாநில பல்கலை., என்பதால்
ஒ வ்வொரு துறையும் ஓர் அலகாக கருதிதான் பணி நியமனங்கள் செய்யப்பட வேண்டும். ஆனால் உயர் கல்வித்துறை செயலாளர் தொழில் அணுகுமுறையை கடைபிடிக்காமல் மத்திய அரசு இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளார். அனைத்திந்திய பணிகளுக்கான நடத்தை விதிகளை அவர் கடைபிடிக்கவில்லை. எனவே அவர் உயர்கல்வித்துறை செயலாளராக தொடர்வதற்கு தகுதியானவர் தானா? என்பதை உரிய அதிகாரம் கொண்ட அதிகாரி பரிசீலிக்க வேண்டும்.


தமிழ்நாட்டில் உள்ள பல்கலைகழகங்களில் ஒட்டுமொத்த பல்கலைகழகத்தையும் ஓர் அலகாக கருத வேண்டுமா? அல்லது ஒவ்வொரு துறையும் ஓர் அலகாக கருத வேண்டுமா ? என்பது கொள்கை முடிவு ஆகும். கொள்கை முடிவுகளை உயர்கல்வித்துறை செயலாளர் போன்ற அதிகாரிகள் எடுக்கமுடியாது. முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் உள்ளிட்டோர் அடங்கிய குழுதான் எடுக்க வேண்டும்.

ஆனால் உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா யாருடனும் எந்தவித கலந்தாய்வும் நடத்தாமல் சமூகநீதி சார்ந்த அரசின் நிலைப்பாட்டை மாற்றுகிறார் என்றால் அது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் செயல் ஆகும். இது ஐகோர்ட் கூறி இருப்பதை போல் சட்டத்தையும் விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் மதிக்காத போக்கு ஆகும். இத்தகையவர்கள் உயர்கல்வித்துறை செயலாளராக நீடிக்க கூடாது.


latest tamil newsஎனவே ஐகோர்ட் அறிவுறுத்தியபடி சமூகநீதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அதிகாரி அபூர்வாவை உயர்கல்வித்துறை செயலாளர் பதவியில் இருந்து அரசு நீக்க வேண்டும். அவரை மத்திய அரசு பணிக்கு அனுப்ப வேண்டும். அதுமட்டுமல்லாது தமிழ்நாட்டில் உள்ள பல்கலைகழகங்களில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தப்படும் போது ஒவ்வொரு துறையும் ஓர் அலகாக கருதும் நடைமுறையே தொடரும் என அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Svs yaadum oore - chennai,இந்தியா
03-ஜன-202114:04:28 IST Report Abuse
Svs yaadum oore //....எக்கனாமிக்ஸ் ஹிஸ்டரி தமிழ் ஆங்கில BBA போன்ற உதவாக்கரை படிப்புகளே....//.....இது உதவாக்கரை படிப்பு என்பது பொதுவான மக்கள் எண்ணம் ....இந்த அடிதடி கலாட்டா ரூட் தல என்று இதற்கெல்லாம் பெயர் போனது நந்தனத்தில் உள்ள ஒரு கல்லூரி ....KREA பல்கலை என்று புதிதாக ஒரு பல்கலை சென்னை அருகில் உள்ள ஆந்திர ஸ்ரீ சிடியில் உள்ளது ....இங்கு நடந்த போராட்டத்தால் இந்த பல்கலை ஆந்திர சென்று விட்டது ....இதே படிப்புகளுக்கு இங்கு கட்டணம் வருடம் 10 லட்சம் ....சென்னையிலிருந்து பலர் படிக்கிறார்கள்... பணக்காரன் கூட பலன் இல்லாமல் இவ்வளவு செலவு செய்ய மாட்டார்கள் ....எந்த படிப்பு படித்தாலும் உலக தரத்தில் இருந்தால் இப்போது வேலை கிடைக்கும் ...என்ன வேலை , எப்படி என்று சொல்லி கொடுக்கவும் ஆட்கள் உள்ளார்கள் ...ஒரு பைசா செலவில்லாமல் படிக்கலாம் .....எல்லா விபரமும் தளங்களில் உள்ளது ...ஆனால் ஆர்வமெல்லாம் ரூட் தல யில் இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது .....
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
03-ஜன-202112:03:55 IST Report Abuse
Ram இடவொதுக்கீட்டால் நாட்டை பின்னோக்கி இழுத்தது பத் தாதா , ஏன் திறமை உள்ளவர்களின் வாய்ப்பை தட்டி பறித்து பொழப்பு நடத்துறீங்க , எல்லாரும் சமமாக இருக்க வேண்டும் என்றுதானே போராட்டம் நடத்தி ஏழைகளின் வாழ்க்கையை முன்னேற வைத்தோம் , ஆனா நல்ல படித்து முன்னேறிய பிறகும் இடவொதுக்கீட்டை அனுபவிப்பவர்கள் எல்லாம் மனுஷநா
Rate this:
Cancel
03-ஜன-202111:29:40 IST Report Abuse
ஆரூர் ரங் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் இட ஒதுக்கீடு அவசியமில்லை. உயர்தர ஆராய்ச்சிக்கு இடவொதுக்கீடு ஒத்துவராது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லையா😡 ? ஆசிரியர் தொழில் அடுத்த தலைமுறையை உருவாக்கும் சேவை🙏. அதனை வெறும் வேலை வாய்ப்பாகக் கருதுவது நல்லதல்ல. பட்டக்கல்வி மற்றும் ஆசிரியரல்லாத வேலைகளில் மட்டும் முதல் தலைமுறையாக கல்வி கற்ற SC ST க்களுக்கு வாய்ப்பளிக்கலாம். முக்கியமாக ஆணவக்😡 கொலை வன் கொடுமை👹 சமுதாயங்களுக்கு இடவொதுக்கீடு கொடுப்பது நாட்டை சீரழிக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X