புதுச்சேரி: அரசு ஊழியர்களை தவிர்த்து மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசிக்கு பதில் ரூ. 1000 வழங்க கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.புதுச்சேரியில் குடிமை பொருள் வழங்கல் துறை வாயிலாக போடப்படும் இலவச அரிசிக்கு பதிலாக 3 மாதங்களுக்கு பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்த ரூ.54 கோடிக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்தார்.இதன் மூலம் 1.75 லட்சம்சிவப்பு கார்டுதாரர்களுக்கு தலா ரூ.2,200 ; 1.5 லட்சம் மஞ்சள் கார்டு தாரர்களுக்கு தலா ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றனர். இதில் சிவப்பு கார்டுதாரர் களுக்கு மட்டுமே பணம் செலுத்தினர். 1.5 லட்சம் மஞ்சள் கார்டுதாரர்களுக்கு செலுத்த வில்லை.அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், ஜி.எஸ்.டி.,வரி செலுத்துவோர் பட்டியலை நீக்கிய பிறகு மஞ்சள் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசிக்கான பணம் வழங்க முடிவு செய்யப்பட்டது.இதில் அரசு ஊழியர்கள் 20 ஆயிரம் பேரின் குடும்பங்கள் நீக்கப்பட்டது. ஜிப்மரில் பணி புரிவோர், வருமான வரி, ஜி.எஸ்.டி.,செலுத்துவோரின் பட்டியல் தரவில்லை. இதனால் மஞ்சள் கார்டு தாரர்களுக்கு அரிசிக்கான பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இது தொடர்பாக முடிவெடுக்க கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டது.இந்நிலையில் அரசு ஊழியர்களை தவிர்த்து மஞ்சள்கார்டுதாரர்களுக்கு இலவசஅரிசிக்கு பதில் பணம் வழங்க கவர்னர் ஒப்புதல் அளித்தார்.நாளை 4ம் தேதி முதல் மஞ்சள் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்த குடிமை பொருள் வழங்கல் துறை ஏற்பாடுகளை செய்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE