புதுச்சேரி: புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.200 வழங்கப்பட உள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு ரேஷன் கார்டு தாரர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, வெல்லம், பாசிப் பருப்பு தலா அரை கிலோ, முந்திரி பருப்பு 25 கிராம், ஏலக்காய் 10 கிராம் வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்தது.பயனாளிகளின் வங்கி கணக்கில் பணமாக நேரடியாக செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்துவதால், பொங்கல் பொருட்களுக்கு ஈடாக ரூ. 200, சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.இந்த கோப்பிற்கு முதல்வர் நாராயணசாமி ஒப்புதல் அளித்து, கவர்னர் கிரண்பேடிக்கு அனுப்பி வைத்தார். கோப்பிற்கு கவர்னர் நேற்று ஒப்புதல் அளித்தார்.இதையடுத்து, 1.75 லட்சம் சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் தலா ரூ.200 வீதம் ரூ. 3.49 கோடி விரைவில் செலுத்தப்பட உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE