பொது செய்தி

இந்தியா

பொங்கல் பானை தயாரிப்பு 'ஜரூர்'

Added : ஜன 02, 2021
Share
Advertisement
காரைக்கால்: காரைக்காலில் பொங்கலுக்கு தேவையான மண் பானை, சட்டிகள், அடுப்புகள் தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.காரைக்காலில் பொங்கலுக்கு புதுப்பானைகள் தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. கோட்டுச்சேரி, மேலஓடுதுறை பகுதிகளில் 30 குடும்பத்தினர் பானை தயாரிப்பதை குடிசை தொழிலாக செய்கின்றனர். பானை தயாரிக்க தேவையான களி மண், சுடுவதிற்கு தேவையான தேங்காய் மட்டை

காரைக்கால்: காரைக்காலில் பொங்கலுக்கு தேவையான மண் பானை, சட்டிகள், அடுப்புகள் தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.காரைக்காலில் பொங்கலுக்கு புதுப்பானைகள் தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. கோட்டுச்சேரி, மேலஓடுதுறை பகுதிகளில் 30 குடும்பத்தினர் பானை தயாரிப்பதை குடிசை தொழிலாக செய்கின்றனர். பானை தயாரிக்க தேவையான களி மண், சுடுவதிற்கு தேவையான தேங்காய் மட்டை உள்ளிட்ட பொருட்கள் விலை அதிகரித்துள்ளது.இதனால் கடந்த ஆண்டு ரூ. 30 விற்ற சிறிய பானை தற்போது ரூ.40 முதல் ரூ.65 விற்கிறது. சட்டி ரூ.40 முதல் ரூ.50 வரை, அடுப்பு ரூ.50 முதல் ரூ.65 விற்கப்படுகிறது.மேலஓடுதுறை மண்பாண்ட தொழிலாளர்கள் சேகர், தங்கையன் கூறுகையில், மண்பானை தொழிலுக்கான மானிய கடன் வசதி மற்றும் சலுகைகளை அரசிடம் கேட்டு வருகிறோம். ஆனால் இது வரை அரசு உதவி செய்யவில்லை. அரசு உதவி செய்தால் குறைந்த விலைக்கு மண்பானைகள் விற்க முடியும். மாவட்டத்தில் மண் எடுப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X