வி.சி., கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும்: திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு

Added : ஜன 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுச்சேரி: வரும் சட்டசபை தேர்தலில் வி.சி., கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி., தெரிவித்தார்.புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை அவரது இல்லத்தில் நேற்று வி.சி., கட்சியின் தலைவர் திருமாவளவன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அரை மணி நேரம் நடந்த சந்திப்பின்போது அமைச்சர் கந்தசாமி, விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் உடனிருந்தனர்.பின்,

புதுச்சேரி: வரும் சட்டசபை தேர்தலில் வி.சி., கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி., தெரிவித்தார்.புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை அவரது இல்லத்தில் நேற்று வி.சி., கட்சியின் தலைவர் திருமாவளவன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அரை மணி நேரம் நடந்த சந்திப்பின்போது அமைச்சர் கந்தசாமி, விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் உடனிருந்தனர்.பின், அவர் அளித்த பேட்டி:புதுச்சேரியில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக முதல்வர் நாராயணசாமியை சந்தித்து பாராட்டு தெரிவித்தேன்.இந்த இலவச கல்வி திட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டி உள்ளது. இத்திட்டத்தை ஓ.பி.சி., மாணவர்களுக்கும் விரிவுப் படுத்த கோரிக்கை வைத்திருக்கிறோம். இதை பரிசீலனை செய்வதாக புதுச்சேரி முதல்வரும் உறுதியளித்துள்ளார். தி.மு.க., கூட்டணியில் உள்ள வி.சி., கட்சி வரும் சட்டசபை தேர்தலில் தனி சின்னத்தில் தான் போட்டியிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X