பொது செய்தி

இந்தியா

கர்நாடகா துணை முதல்வர் சனீஸ்வரன் கோவிலில் தரிசனம்

Added : ஜன 02, 2021
Share
Advertisement
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் கர்நாடகா துணை முதல்வர் அஷ்வத் நாராயண், கன்னட நடிகர் யாஷ் தரிசனம் செய்தனர்.புதுச்சேரி மாநிலம், காரைக்கால் திருநள்ளாரில் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் நேற்று காலை 11.30 மணிக்கு கர்நாடக மாநில துணை முதல்வர் அஷ்வத் நாராயண், கன்னட நடிகர் யாஷ் தரிசனம் செய்தனர்.கலெக்டர் அர்ஜீன் சர்மா,

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் கர்நாடகா துணை முதல்வர் அஷ்வத் நாராயண், கன்னட நடிகர் யாஷ் தரிசனம் செய்தனர்.புதுச்சேரி மாநிலம், காரைக்கால் திருநள்ளாரில் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் நேற்று காலை 11.30 மணிக்கு கர்நாடக மாநில துணை முதல்வர் அஷ்வத் நாராயண், கன்னட நடிகர் யாஷ் தரிசனம் செய்தனர்.கலெக்டர் அர்ஜீன் சர்மா, கோவில் நிர்வாக அதிகாரி ஆதாஷ் சால்வை அணிவித்து வரவேற்றனர். கோவிலில் உள்ள தர்பாரண்யேஸ்வரர், முருகன், விநாயகர், அம்பாள் சுவாமிகளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. பின், சனீஸ்வர பகவானுக்கு நடந்த சிறப்பு பூஜையில் கர்நாடகா துணை முதல்வர் அஷ்வத் நாராயண், கன்னட நடிகர் யாஷ் பங்கேற்றனர். இருவரும் எள் தீபம் ஏற்றி தரிசனம் செய்தனர். சீனியர் எஸ்.பி., நிகாரிகாபட், எஸ்.பி., ரகுநாயகன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X