கொரோனா தடுப்பூசி ஒத்திகை கலெக்டர் அர்ஜூன்சர்மா ஆய்வு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பூசி ஒத்திகை கலெக்டர் அர்ஜூன்சர்மா ஆய்வு

Added : ஜன 02, 2021
Share
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை, பாதுகாப்பு நடவடிக்கை குறித்து நேற்று கலெக்டர் அர்ஜூன்சர்மா ஆய்வு செய்தார்.காரைக்கால் மாவட்டத்தில் முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்டத்தில் 8 தடுப்பூசி செலுத்தும் மையங்கள் தேர்வு செய்து தயார் நிலையில் உள்ளன. அரசு பொது

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை, பாதுகாப்பு நடவடிக்கை குறித்து நேற்று கலெக்டர் அர்ஜூன்சர்மா ஆய்வு செய்தார்.காரைக்கால் மாவட்டத்தில் முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்டத்தில் 8 தடுப்பூசி செலுத்தும் மையங்கள் தேர்வு செய்து தயார் நிலையில் உள்ளன. அரசு பொது மருந்துவமனை மற்றும் நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், தேனுார் நலவழி மையம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நடந்தது. இப்பணியை கலெக்டர் அர்ஜூன்சர்மா பார்வையிட்டார்.கொரோனா தடுப்பூசி செலுத்தும் முறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை, பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்து நலவழித்துறை துணை இயக்குனர் மோகன் ராஜ் விளக்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X