வாஷிங்டன்:அமெரிக்க ராணுவ பட்ஜெட்டுக்கு பார்லி., ஒப்புதல் அளித்ததால், அது சட்டமானது. இதையடுத்து, இந்தியாவுடன் எல்லைப் பிரச்னையில் மூர்க்கத்தனமாக சீனா நடந்து கொள்வதை கண்டிக்கும் தீர்மானமும் சட்டமானது.
நடப்பு, 2021ம் ஆண்டுக்கான, 55 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ராணுவ பட்ஜெட்டை உறுதி செய்யும் மசோதா, அமெரிக்க பார்லி.,யின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் ஏகமனதாக நிறைவேறியது.ஆனால், நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக உள்ளதாகக் கூறி, தன், 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்க, அதிபர் டிரம்ப் மறுத்தார்; இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிபரின் முடிவை நிராகரிக்கும் வகையில், அமெரிக்க பார்லி.,யில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது; அது தற்போது சட்டமாகியுள்ளது.இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையில், சீனா மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதைக் கண்டித்து, அமெரிக்க பார்லி.,யில் தனியாக ஒரு தீர்மானம் நிறைவேறியது.அது பட்ஜெட்டில் இணைக்கப்பட்டிருந்தது. தற்போது பட்ஜெட் சட்டமானதால், சீனாவை கண்டிக்கும் தீர்மானமும் சட்டமாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE