அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வருக்கு அ.தி.மு.க.,வினர் வரவேற்பு

Added : ஜன 02, 2021
Share
Advertisement
பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனுாரில் முதல்வர் பழனிசாமிக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா, பரமக்குடி எம்.எல்.ஏ., சதன் பிரபாகர், ராமநாதபுரம் எம்.எல்.ஏ., மணிகண்டன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து பார்த்திபனுாரில் தனியார் மகாலில் ஆடு வளர்ப்போர் சங்கத்தினருடன் உரையாட வந்தபோது, அ.தி.மு.க.,

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனுாரில் முதல்வர் பழனிசாமிக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா, பரமக்குடி எம்.எல்.ஏ., சதன் பிரபாகர், ராமநாதபுரம் எம்.எல்.ஏ., மணிகண்டன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து பார்த்திபனுாரில் தனியார் மகாலில் ஆடு வளர்ப்போர் சங்கத்தினருடன் உரையாட வந்தபோது, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் முத்தையா, பரமக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் சிந்தாமணி, துணைத் தலைவர் ராஜேந்திரன் வரவேற்றனர். அங்கு 11 கறவை பசு மாடுகளை முதல்வர் பழனிசாமி விவசாயிகளுக்கு வழங்கினார். அமைச்சர் உதயகுமார்,முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, முன்னாள் எம்.பி., அன்வர்ராஜா, முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ் , மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் வின்சென்ட் ராஜா, போகலுார் ஒன்றிய செயலாளர் நாகநாதன், வாணியவல்லம் ஊராட்சி தலைவர் நாகநாதன்.ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய செயலாளர் எம்.சி.நந்திவர்மன், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் பழ.கருப்பையா, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் எஸ்.ராஜா, ஒன்றிய கழக துணை செயலாளர் கவுன்சிலர் பத்மினி கருப்பையா, ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் பால.கனகராஜ், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கிருஷ்ணன், ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் துரை.மணிகண்டன், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் எஸ்.ஆர்.மணி, காவனுார் ஊராட்சி மன்ற தலைவர் கவுதமி திவாகரன், மகாகிருஷ்ணா ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் துரைசிங்கம், திருவாடானை ஒன்றிய செயலாளர் மதிவாணன், அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் கணேசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னாள்அமைச்சர் மணிகண்டன் எம்.எல்.ஏ., மாவட்ட ஜெ., பேரவை செயலாளர்சேதுபாலசிங்கம், துணை செயலாளர் மருதுபாண்டியன், தொழிலதிபர் ரெத்தினம்,இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பால்பாண்டியன்,முதுகுளத்துார் ஒன்றிய செயலாளர் தர்மர், கடலாடி முன்னாள் ஒன்றிய செயலாளர்மூக்கையா, ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஆத்தி, சாயல்குடிநகரச்செயலாளர் ஜெயபாண்டியன் ஆகியோர் வரவேற்றனர்.---------மானாமதுரை: முன்னதாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற முதல்வருக்கு அமைச்சர் பாஸ்கரன்,முன்னாள் எம்.பி.,செந்தில்நாதன்,எம்.எல்.ஏ.,நாகராஜன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே அவர் பேசியதாவது: சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும்,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X