புதுடில்லி:மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி ஜகியுர் ரகுமான் லக்வியை, பாக்., போலீசார், கைது செய்தனர்.
கடந்த, 2008ல், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் உயிரிழந்தனர். 300க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சதிக்கு மூளையாக செயல்பட்ட, லஷ்கர் பயங்கரவாதி ஜகியுர் ரகுமான் லக்வி, விசாரணை கைதியாக, பாகிஸ்தானில் ஆறு ஆண்டுகள் சிறையில் இருந்த பின், 2015ல் விடுதலை செய்யப்பட்டான். அவனை, சர்வதேச பயங்கரவாதி என, ஐ.நா., அறிவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில், பயங்கரவாத தடுப்பு போலீசார், ஜகியுர் ரகுமான் லக்வியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மருந்து நிறுவனத்தின் பெயரில், பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக, லக்வி மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் தான், பாக்., கோரிக்கைப்படி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், லக்வியின் அன்றாடச் செலவிற்கு, அவன் வங்கி கணக்கில் இருந்து, மாதம், 1.50 லட்சம் ரூபாய் வழங்க ஒப்புதல் வழங்கியது.இதன் மூலம், பயங்கரவாதிகள் பிரச்னையில் பாக்., இரட்டை வேடம் போடுவது அம்பலமாகியுள்ளதாக, ஐ.நா.,வில், இந்தியா தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE