திருவாடானை : திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகம்அருகே சுடுகாடு உள்ளது. விபத்தில் பலியானவர்கள், தற்கொலை, கொலை மற்றும் அடையாளம் தெரியாதஉடல்கள் திருவாடானை அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்குபின் அங்கு புதைக்கப்படும்.
இந்த சுடுகாட்டில் சீமைகருவேல மரங்கள் அடர்ந்து புதர் மண்டியதால் புதைக்கும் இடத்திற்கு உடல்களைதுாக்கி செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இறந்தவர்களின் உறவினர்கள் மதுரை- தொண்டி சாலை ஓரத்தில் உள்ள இடங்களில் உடல்களைபுதைத்தனர். இச் செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. செய்தியின் எதிரொலியாக அச்சங்குடி ஊராட்சி தலைவர் கணேசன்தொழிலாளர்கள் மூலம் செடிகள், புதர்களை அகற்றி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE