புதுச்சத்திரம்: நீரில் மூழ்கி இறந்த சிறுவர்கள் குடும்பத்திற்கு வி.சி., கட்சித் தலைவர் நிதியுதவி வழங்கினார்.புதுச்சத்திரம் அடுத்த பால்வாத்துண்ணான் பகுதியைச் சேர்ந்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்தனர். அதையொட்டி வி.சி., தலைவர் திருமாவளவன், இறந்த சிறுவர்கள் குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.மேலும், வெள்ள நிவாரணமாக அப்பகுதி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கினார்.மாவட்ட செயலர்கள் அறவாழி, சிந்தனைச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE