நெல்லிக்குப்பம்: 'புயலால் பாதித்தபோது நிவாரணம் வழங்காமல் தேர்தலுக்காக தற்போது நிவாரணம் வழங்குகிறார்கள்' என தி.மு.க., எம்.எல்.ஏ., பேசினார்.
நெல்லிக்குப்பம் அடுத்த பில்லாலியில் கடலுார் ஒன்றிய தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது.கூட்டத்தில், குறிஞ்சிபாடி தொகுதி எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் பேசியதாவது:2016ம் ஆண்டு தி.மு.க. வெற்றி பெற்று கருணாநிதி முதல்வராகி இருந்தால் முதல் கையெழுத்தே டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கானதாக இருந்திருக்கும். கொரோனா ஊரடங்கால் மக்கள் வேலையிழந்து தவித்த போது 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தினோம்.அப்போது வழங்கியிருந்தால் மக்கள் வீட்டிலேயே இருந்திருப்பார்கள் கொரோனா பரவியிருக்காது. அரசின் அலட்சியத்தாலேயே கொரோனா பரவியது. புயலால் பாதித்தபோது நிவாரணம் வழங்காமல் தேர்தலுக்காக தற்போது நிவாரணம் வழங்குகிறார்கள்.சட்டம், ஒழுங்கு கெட்டுள்ளது. தமிழகத்தில் நல்லாட்சி மலர வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.இவ்வாறு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE