பொது செய்தி

தமிழ்நாடு

பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Added : ஜன 02, 2021
Share
Advertisement
புவனகிரி: புவனகிரி அருகே வடிகால் மற்றும் பாசன வாய்க்காலில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கல்வெர்ட்டை அகற்றும் பணி நடந்தது.புவனகிரி அடுத்த பூதவராயன்பேட்டை சாலையில் 1 கி.மீ., தொலைவிற்கு பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான வடிகால் மற்றும் பாசன வாய்க்காலில் தனி நபர்கள் 8 இடங்களில் சிமென்ட் குழாய் வைத்து கல்வெர்ட் கட்டி ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.இதனால், மழைக் காலங்களில்

புவனகிரி: புவனகிரி அருகே வடிகால் மற்றும் பாசன வாய்க்காலில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கல்வெர்ட்டை அகற்றும் பணி நடந்தது.புவனகிரி அடுத்த பூதவராயன்பேட்டை சாலையில் 1 கி.மீ., தொலைவிற்கு பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான வடிகால் மற்றும் பாசன வாய்க்காலில் தனி நபர்கள் 8 இடங்களில் சிமென்ட் குழாய் வைத்து கல்வெர்ட் கட்டி ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.இதனால், மழைக் காலங்களில் தண்ணீர் வடியாமல் ஊருக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, ஆக்கிரமித்து கட்டப்பட்ட கல்வெர்ட்டுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.கலெக்டர் உத்தரவின் பேரில் நேற்று பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அருளரசன் மற்றும் வருவாய்த் துறையினர் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் கல்வெர்ட்டுகளை அகற்றினர்.இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X