விருத்தாசலம்: சங்கடஹர சதுர்த்தியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், ஆழத்து விநாயகருக்கு நேற்று காலை சிறப்பு அபிேஷகம், அருகம்புல் மாலை சாற்றி தீபாராதனை நடந்தது. மாலை சிறப்பு அலங்காரத்தில் சாமி அருள்பாலித்தார்.மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிேஷகமும் தொடர்ந்து வெள்ளிக் கவசத்திலும் அருள்பாலித்தார்.இதேபோன்று நகரில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE