பொது செய்தி

தமிழ்நாடு

நேரடி நியமன அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு

Added : ஜன 02, 2021
Share
Advertisement
விருத்தாசலம்: தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் விருத்தாசலத்தில் நடந்தது.மாவட்டத் தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் சிவா, தலைவர் சையது அபுதாகீர் பேசினர். தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை

விருத்தாசலம்: தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் விருத்தாசலத்தில் நடந்தது.மாவட்டத் தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் சிவா, தலைவர் சையது அபுதாகீர் பேசினர். தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நேரடி நியமன உதவியாளர்கள் ஐந்து ஆண்டுகள் பணி முடிந்ததும், அவர்களை துணை தாசில்தார் என பெயர் மாற்றம் செய்திட வேண்டும்.மாவட்டத்தில் நீண்டகாலமாக காலியாக உள்ள துணை தாசில்தார் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.20 கிராமங்களுக்கு மேல் உள்ள குறுவட்டங்களை சீரமைத்து, நிர்வாக நலன் கருதி புதிய குறுவட்டங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக, கொரோனாவுக்கு பலியான விருத்தாசலம் தாசில்தார் கவியரசு, கடலுார் நில அளவையர் ராஜேஸ்வரி ஆகியோருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X