புத்தாண்டு துவக்கத்தில் மழை
மாமல்லபுரம்: வானிலை மையம், நேற்று முதல், வரும், 5ம் தேதி வரை, கடலோர மாவட்ட பகுதிகளில், மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தது.அதன்படி, செங்கல்பட்டு மாவட்ட கடலோர பகுதிகளில், நேற்று, மழை பெய்தது. மாமல்லபுரம், கல்பாக்கம், கூவத்துார் சுற்றுபுற பகுதிகளில், காலை முதல், அவ்வப்போது, மழை பெய்தது.மாமல்லபுரத்தில், சுற்றுலாப் பயணியர், கொட்டும் மழையில், குடைபிடித்து, சிற்பங்களை ரசித்தனர். கடந்த ஆண்டும், ஜன., 1ல், மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.மணிலா விதை வழங்கல்
உத்திரமேரூர்: உத்திரமேரூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில், உத்திரமேரூர் ஒன்றியம், காரணை கிராம விவசாயிகளுக்கான மணிலா விதை வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் சோழனுார் ஏழுமலை தலைமை தாங்கினார். தேசிய வேளாண்மை நிறுவன பொறுப்பாளர் சுனில்குமார், களப்பணியாளர் சரவணன் ஆகியோர் மணிலா உற்பத்தி செய்யும் முறைகள் குறித்தும், குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, 60 விவசாயிகளுக்கு மணிலா விதைகள் வழங்கப்பட்டன.சித்த மருத்துவ தின விழா
காஞ்சிபுரம்: தேசிய சித்த மருத்துவ தினம், ஜனவரி மாதம், 2ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்ட இந்திய மருந்துவம் மற்றும் ஓமியோபதி துறை மற்றும் சங்கரா கல்லுாரியின் உயிரி வேதியியல் துணை இணைந்து, சித்த மருத்துவ தின நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தன.காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், நேற்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மூலிகை பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. பாரம்பரிய உணவு தானியங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு, மூலிகை பயன்கள் குறித்து, மாவட்ட சித்த மருத்துவர் அய்யாசாமி விளக்கமளித்தார். தொடர்ந்து, காலை, 11:30 மணிக்கு, சித்த மருத்துவம் குறித்து இணையவழி கருத்தரங்கமும் நடைபெற்றது. மாமல்லபுரம் அரசு மருத்துவமனையிலும், இந்நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.தையல் இயந்திரம் வழங்கல்
திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சிறப்பு குழந்தைகளின் பெற்றோருக்கு, இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி, முதல்வரான, மருத்துவர் அரசி தலைமையில் நடந்தது.மாவட்ட இடையீட்டு சிகிச்சை மையம், 'ஸ்பாஸ்திக் சொசைட்டி' மற்றும் 'ரோட்டரி கிளப்' ஆகியவை இணைந்து நடத்திய விழாவில், மருத்துவர்கள் ஜெகதீஷ்குமார், ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், சிறப்பு குழந்தைகளின் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து, ஏழு பேருக்கு, இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.சங்கடஹர சதுர்த்தி விழா
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, அண்ணாதுரை சிலை அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில், மாலை, 6:00 மணிக்கு, இந்த ஆண்டின், முதல் சங்கடஹர சதுர்த்தி விழா, நேற்று கோலாகலமாக நடந்தது.பால், தயிர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.இதேபோல், ஊத்துக்கோட்டை, ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள வரசித்தி விநாயகர், தொம்பரம்பேடு மஹா கால பைரவர் கோவிலில் உள்ள சோதர கணபதி, சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர் உள்ளிட்ட பெரும்பாலான விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலமாக நடந்தது.விவசாயிகளுக்கு
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE