ஸ்ரீமுஷ்ணம்; டிராக்டர் மீது பைக் மோதி ஒருவர் இறந்தார்.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீநெடுஞ்சேரியைச் சேர்ந்தவர் ரவி, 52; திட்டக்குடியில் நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து ஸ்ரீமுஷ்ணம் சாலையில் தனது பைக்கில் வீடு திரும்பினார்.ஸ்ரீ சாத்தமங்கலம் அருகே கரும்பு ஏற்றி நின்று கொண்டிருந்த டிராக்டர் பின்னால் மோதினார். இதில் படுகாயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே இறந்தார்.ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE