நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் மார்கழி மாத சிவ விஷ்ணு பஜனை ஊர்வலம் நேற்று நடந்தது.பூலோகநாதரும், பிரசன்ன வெங்கடாஜலபதியும் தனித்தனியாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருக்கண்டேஸ்வரம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வரை சென்றது.பஜனை கோஷ்டியினர் பக்தி பாடல்களை பாடியபடி சென்றனர். புண்ணியர் ஆன்மிக பேரவை பாஸ்கரன் தலைமையில் சிறுவர்கள் சிவவாத்தியம் இசைத்தபடி பாடல்கள் பாடினர். ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE