எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,- தி.மு.க., கூட்டணிகளில் குழப்பம்

Updated : ஜன 03, 2021 | Added : ஜன 02, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ள நிலையில், இரு கூட்டணிகளுமே இன்னும் முழுமை பெறாமல், இழுபறியும், குழப்பமும் நீடிப்பதால், அக்கட்சி தலைமைகள் அதிர்ச்சியில் உள்ளன.தமிழகத்தில் சட்டசபை பொதுத்தேர்தல், ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்க வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. எனவே, அரசியல் கட்சிகள், தேர்தல் பணிகளை துவக்கி
அ.தி.மு.க., தி.மு.க., கூட்டணி, குழப்பம், திமுக, அதிமுக,  பாஜ, பாமக, பா.ஜ., பா.ம.க., விசி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, ம.தி.மு.க., ஓவைசி,

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ள நிலையில், இரு கூட்டணிகளுமே இன்னும் முழுமை பெறாமல், இழுபறியும், குழப்பமும் நீடிப்பதால், அக்கட்சி தலைமைகள் அதிர்ச்சியில் உள்ளன.

தமிழகத்தில் சட்டசபை பொதுத்தேர்தல், ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்க வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. எனவே, அரசியல் கட்சிகள், தேர்தல் பணிகளை துவக்கி உள்ளன.தற்போதைய சூழ்நிலையில், லோக்சபா தேர்தலை சந்தித்த, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கூட்டணிகள், எந்த மாற்றமும் இன்றி தொடர்கின்றன.கூட்டணி தலைமை யார் ?அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., -- பா.ம.க., -- தே.மு.தி.க., -- த.மா.கா., - மற்றும் புதிய நீதிக்கட்சி உள்ளன. தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ்,- மார்க்சிஸ்ட் கம்யூ., -- இந்திய கம்யூ.,- - ம.தி.மு.க.,- - விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இரு கூட்டணிகளும், சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வரும் நிலையில், இரு தரப்பிலும் குழப்பங்கள் அதிகரிக்க துவங்கி உள்ளன.

அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் யார் என்ற, கேள்வி எழுந்தபோது, கட்சி நிர்வாகிகள் கூடிப்பேசி, இ.பி.எஸ்.,சை அறிவித்தனர். அதன் கூட்டணி கட்சிகள்,இன்னமும் அதை ஏற்கவில்லை.'முதல்வர் வேட்பாளர் யார்; கூட்டணி தலைமை யார் என்பதை, தேசிய தலைமை முடிவு செய்யும்' என, பா.ஜ., தலைவர்கள் கூறி வருகின்றனர்.பா.ம.க., தலைவர் ஜி.கே.மணியும், 'தேர்தல் நெருக்கத்தில், கூட்டணி இறுதி செய்யப்பட்ட பின், முதல்வர் வேட்பாளர் முடிவு செய்யப்படுவார்' எனக் கூறியுள்ளார்.இந்த கட்சிகளை பொறுத்தவரை, தங்களுக்கு தேவையான தொகுதிகளை பெற்ற பின்னரே, கூட்டணியை உறுதி செய்யும் முடிவில் இருப்பதால், 'இ.பி.எஸ்., தான், எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்' என, கூற தயக்கம் காட்டி வருகின்றன.இது புரிந்தும், புரியாமலும், அ.தி.மு.க., அமைச்சர்கள், பா.ஜ., மற்றும் பா.ம.க.,வை விமர்சிப்பது, அக்கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.ஜெயலலிதா இல்லாததால், கூட்டணி கட்சிகளின் ஆதரவு அவசியம் என்ற நிலைமை, அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.

அதனால், அதிக தொகுதிகளை பெற, கூட்டணி கட்சிகள் முயற்சிக்கின்றன. அ.தி.மு.க., தலைமையோ, ஜெ., பாணியை பின்பற்ற முயற்சிப்பதால், கூட்டணியில் இழுபறி தொடர்கிறது. பா.ஜ., - பா.ம.க., கேட்கும் தொகுதிகளை ஒதுக்க முன்வராமல், பழைய கணக்கு பார்க்கிறது.
தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீடு பேச்சு இன்னும் துவக்கப்படவே இல்லை. ம.தி.மு.க.,- - வி.சி., போன்ற கட்சிகளை, தி.மு.க., சின்னத்தில் போட்டியிட வைக்க வேண்டும் என்ற முயற்சியை தான், அறிவாலயம் மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது.
தனிச் சின்னத்தில் போட்டிம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், இதற்கு உடன்பட மறுத்து விட்டனர். 'தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம்' என, இவ்விரு தலைவர்களும், நேற்று பகிரங்கமாக தெரிவித்து விட்டனர்.
மேலும், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, மற்ற கட்சிகளும், இம்முறை கூடுதல் பங்கீட்டை எதிர்பார்க்கின்றன.


கடந்த சட்டசபை தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு, அதிக இடங்களை ஒதுக்கியதால், ஆட்சி அமைக்க முடியாத நிலை, தி.மு.க.,வுக்கு ஏற்பட்டது.எனவே, இம்முறை அதிக தொகுதிகளில் போட்டியிட, தி.மு.க., முடிவு செய்துள்ளது. இதனால், எதிர்க்கட்சி கூட்டணியிலும் குழப்பம் தொடர்கிறது.மேலும், தி.மு.க., தலைமை, ஓவைசியின், ஏ.ஐ.எம்.எம்., கட்சியை இழுக்க முயற்சிப்பது, ஏற்கனவே கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிகளுக்கு, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, இரு கூட்டணிகளிலும் இடம்பெறாத, மக்கள் நீதி மையம், அ.ம.மு.க., போன்ற கட்சிகள், தங்கள் தலைமையில்,சிறிய கட்சிகளை இணைத்து, தனி அணி அமைக்க முயற்சித்து வருகின்றன.அதனால், எந்த கூட்டணியும் முழுமை பெறாமல், அரைகுறையாகவே உள்ளன.
அதனால், கூட்டணி கட்சிகளை இழுக்காமல், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் தன்னிச்சையாக முடிவெடுத்து, பிரசார களத்தில் குதித்து விட்டன.


சென்னை மாநாட்டில் ஓவைசி?சென்னையில், வரும், 6ம் தேதி, தி.மு.க., சிறுபான்மையினர் அணி சார்பில் நடக்கும், 'இதயங்களை இணைப்போம்' என்ற மாநாட்டில், ஓவைசி பங்கேற்கிறார் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பீஹார் சட்டசபை தேர்தலில், ராஷ்ட்டிரிய ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கும், ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில், பா.ஜ., வெற்றி பெறுவதற்கும், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தவைர் ஓவைசி தான் காரணம் என, அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலில், ஓவைசி கட்சி, தனியாக போட்டியிட்டால், தி.மு.க.,வின் வெற்றியை பாதிக்கும் எனக் கருதப்படுகிறது. எனவே, வரும், 6ம் தேதி, சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், தி.மு.க., சிறுபான்மையினர் அணி சார்பில், 'இதயங்களை இணைப்போம்' என்ற அரசியல் மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில், ஓவைசி பங்கேற்க வேண்டும் என, தி.மு.க., சிறுபான்மை பிரிவு செயலர் மஸ்தான், நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். எனவே, மாநாட்டில் ஓவைசி பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
- நமது நிருபர் -


Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
periasamy - Doha,கத்தார்
04-ஜன-202111:45:52 IST Report Abuse
periasamy அதிமுக கூட்டணியில் குழப்பம் உள்ளது
Rate this:
Cancel
03-ஜன-202118:39:02 IST Report Abuse
ஸாயிப்ரியா மக்களுக்கு குழப்பம் தெளிவாக ஓட்டுரிமையை பயன் படுத்துவார்கள். நம்பிக்கை உள்ளது.
Rate this:
Cancel
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஜன-202116:50:40 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan muslim leq , manitha neya makal muslim katchi, chritian front ,etc..now owaisi party ..in DMK group ..name is mata sarra kootani ..no religion parties ..i think muslim and Christian religion is not consider as religion by dmk and dk groups
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X