பொது செய்தி

தமிழ்நாடு

பழைய அலுவலக கட்டடத்தை அகற்ற நடவடிக்கை தேவை

Added : ஜன 02, 2021
Share
Advertisement
சின்னசேலம்: சின்னசேலம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி அலுவலக கட்டடத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.சின்னசேலம் அடுத்த மேலுார் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டப்பட்டது. இவை முற்றிலும் சேதமடைந்து விட்டதால், அதே பகுதியில் ஏற்கனவே இருந்த கட்டடத்தின் அருகே, கடந்த 2000 ம் ஆண்டு புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டு மக்கள்

சின்னசேலம்: சின்னசேலம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி அலுவலக கட்டடத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.சின்னசேலம் அடுத்த மேலுார் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டப்பட்டது. இவை முற்றிலும் சேதமடைந்து விட்டதால், அதே பகுதியில் ஏற்கனவே இருந்த கட்டடத்தின் அருகே, கடந்த 2000 ம் ஆண்டு புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. தற்போது பழைய ஊராட்சி அலுவலக கட்டடம் முற்றிலும் சேதமடைந்துள்ளது.அலுவலக கட்டடத்தின் மேல் தள காரைகள் உடைந்து விழுந்து வருகின்றன. விபத்தினை உணராத அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அங்கு அமருகின்றனர்.மேலும் அருகிலேயே பால் கொள்முதல் பணிகளும் நடப்பதால், விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, மேலுாரில் பயன்பாட்டிற்கு இல்லாமல் உள்ள பழைய ஊராட்சி அலுவலக கட்டடத்தை இடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X