2021-க்கு பின் சிறைச்சாலைதான் மம்தா கட்சி அலுவலகமாக இருக்கும்: பாஜக

Updated : ஜன 02, 2021 | Added : ஜன 02, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
கோல்கட்டா:2021-ம் ஆண்டுக்கு பின் அலிப்பூர் மத்திய சிறைச்சாலை தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகமாக இருக்கும் என மத்திய இணை அமைச்சர் பபுல் சுப்ரியா தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடபெற உள்ளது.மேற்கு வங்கத்தில் ஆட்சியை

கோல்கட்டா:2021-ம் ஆண்டுக்கு பின் அலிப்பூர் மத்திய சிறைச்சாலை தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகமாக இருக்கும் என மத்திய இணை அமைச்சர் பபுல் சுப்ரியா தெரிவித்துள்ளார்.



latest tamil news



மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடபெற உள்ளது.
மேற்கு வங்கத்தில் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் முயற்சித்து வரும் நிலையில் இந்த முறை ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால், திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தற்போதில் இருந்தே தேர்தல் பிரசாரத்தை இரு கட்சிகளும் தொடங்கியுள்ளன. பிரசார கூட்டங்களின் போது இரு கட்சிகளுக்கும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
இந்நிலையில், மேற்குவங்க பாஜக தலைவர்களின் ஒருவரும், மத்திய அமைச்சருமான பபுல் சுப்ரியா அம்மாநிலத்தின் புர்பா மதினிப்பூர் பகுதியில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்றார்.


latest tamil news



அந்த கூட்டத்தில் பாபுல் சுப்ரியா, பேசியதாவது: '2021-ம் ஆண்டுக்கு பிறகு நீலம் மற்றும் வெள்ளை நிறத்தை கொண்ட அலிப்பூர் மத்திய சிறைச்சாலை தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகமாக இருக்கும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் அங்கு தான் இருப்பார்கள்' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஜன-202109:54:26 IST Report Abuse
சம்பத் குமார் 1).தவறான பொறுப்பற்ற பேச்சு. மம்தா மேடம் தவறு செய்து இருந்தால் கோர்ட்டு தான் தீர்ப்பு வழங்கும்.2). எந்த சிறைக்கு மம்தா செல்வார் என்பதை நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும்.3). ஒரு இறை அமைச்சர் மம்தா அவர்கள் எந்த சிறைக்கு செல்வார் என தீர்மானிக்க முடியாது. நன்றி ஐயா.
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
03-ஜன-202112:29:09 IST Report Abuse
Malick Rajaபதவி பவிசு என்னவெல்லாம் பேசவேண்டும் என்பதை கூட வரையறுப்பதில்லை .. இது போன்றவர்கள் அமைச்சர் பதவி வகிப்பது இழுக்கு என்பதை தவிர வேறொன்றும் இல்லை ..எந்த ஒரு அரசியல் கட்சியும் 100 % யோக்கியமாக இருப்பthaaka சொல்லவே முடியாது ......
Rate this:
Cancel
Lakshmipathi S - Bangalore,இந்தியா
03-ஜன-202109:26:02 IST Report Abuse
Lakshmipathi S மம்தா ரோஷமானவர் தேர்தலில் தோற்றால் என்னசெய்யவது என அவர் அறிவர்.
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
03-ஜன-202107:52:19 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ 2021-க்கு பின் சிறைச்சாலைதான் மம்தா கட்சி அலுவலகமாக இருக்கும் //// திரிணாமூல் காங்கிரஸ் ஏதோ கடந்த இரு வருடங்களாக மட்டும் ஊழலில் ஈடுபடலை .......... தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி, அதிகாரத்தையும் சுவைத்து விட்டது ........ பாஜகவால் என்ன செய்ய முடிந்தது ????? 2014 முதல் மத்தியில் அதிகாரத்தில் இருப்பவர்கள் ஏன் செய்ய முடியலை ????
Rate this:
Suppan - Mumbai,இந்தியா
03-ஜன-202112:58:40 IST Report Abuse
Suppanமாநில ஆட்சிகளை கலைக்க வகை செய்யும் செக்ஷன் 356 ஐ  மத்திய அரசால் இந்திரா காந்தி மாதிரி உபயோகப் படுத்த முடியாது. ஊழல் மீது விசாரணை, வழக்கு என்று பல வருடங்கள் இழுத்தடிக்கப் பட்டு தீர்ப்பு வரலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X