பொது செய்தி

இந்தியா

மற்றொரு தடுப்பூசிக்கு நிபுணர் குழு பரிந்துரை

Added : ஜன 02, 2021
Share
Advertisement
புதுடில்லி:பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலை தயாரித்துள்ள, கொரோனா தடுப்பூசிக்கு, அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு தயாரிப்பான, 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின், 'கோவாக்சின்' என்ற தடுப்பூசிக்கு அனுமதி வழங்க, நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.ஆக்ஸ்போர்டு பல்கலை உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் ஒப்பந்தத்தை,

புதுடில்லி:பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலை தயாரித்துள்ள, கொரோனா தடுப்பூசிக்கு, அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு தயாரிப்பான, 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின், 'கோவாக்சின்' என்ற தடுப்பூசிக்கு அனுமதி வழங்க, நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலை உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் ஒப்பந்தத்தை, மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த, சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி கோரி, அந்த நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.அதை பரிசீலித்த, மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்கள் குழு, 'இந்த தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்கலாம்' என, பரிந்துரை செய்துள்ளது.

அடுத்ததாக, இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனமும், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பும் இணைந்து, 'கோவாக்சின்' என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளன.உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப் பட்டுள்ள இந்த தடுப்பூசியை அவசரகால பயன் பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

அதை பரிசீலித்த, மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்கள் குழு, 'இந்த தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்கலாம்' என, பரிந்துரை செய்துள்ளது.இதற்கிடையே, 'எய்ம்ஸ்' தலைவர் ரன்தீப் குலேரியா கூறுகையில்,''இன்னும், 15 நாட்களுக்குள், இந்த இரண்டு தடுப்பூசிகளும் பயன்பாட்டுக்கு வந்து விடும்,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X