அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக காங்கிரசை நிர்வகிக்க 400 பேர்

Updated : ஜன 03, 2021 | Added : ஜன 02, 2021 | கருத்துகள் (64)
Share
Advertisement
சென்னை : தமிழக காங்கிரஸ் கட்சியில், ஏகப்பட்டவர்களுக்கு பதவிகள் அளிக்கப்பட்டுள்ள, புதிய கூத்து அரங்கேறியுள்ளது. துணை தலைவர் பதவிக்கு, 32; பொதுச் செயலர் பதவிக்கு, 57; செயலர் பதவிக்கு, 104 பேர் என, புதிய நிர்வாகிகளாக, 400க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். பதவி கிடைக்காத கோபத்தில், 'இதனால், எந்த பயனும் இல்லை; அதிகாரமும் இல்லை' என, கார்த்தி சிதம்பரம் கொதிப்பை
தமிழகம், காங்கிரஸ்,  காங்., கார்த்தி சிதம்பரம், பதவி

சென்னை : தமிழக காங்கிரஸ் கட்சியில், ஏகப்பட்டவர்களுக்கு பதவிகள் அளிக்கப்பட்டுள்ள, புதிய கூத்து அரங்கேறியுள்ளது. துணை தலைவர் பதவிக்கு, 32; பொதுச் செயலர் பதவிக்கு, 57; செயலர் பதவிக்கு, 104 பேர் என, புதிய நிர்வாகிகளாக, 400க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். பதவி கிடைக்காத கோபத்தில், 'இதனால், எந்த பயனும் இல்லை; அதிகாரமும் இல்லை' என, கார்த்தி சிதம்பரம் கொதிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு, புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாக இருந்து வந்தது. ஞானதேசிகன் தலைவராக இருந்த போது நியமிக்கப்பட்ட, நிர்வாகிகளே தற்போதும் நீடிக்கின்றனர். இடையில், இளங்கோவனும், திருநாவுக்கரசரும், தலைவர்களாக வந்து சென்று விட்டனர்.


தீவிர முயற்சிதற்போது, தலைவராக உள்ள அழகிரி, தனக்கான நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்த, தீவிர முயற்சி எடுத்தார். அதன் பலனாக, 400க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அடங்கிய, 'ஜம்போ' பட்டியலுக்கு, காங்கிரஸ் மேலிடம், நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, தமிழக காங்கிரஸ் நிர்வாக குழு உறுப்பினர்களாக, மாநில தலைவர் அழகிரி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், மணிசங்கர் அய்யர், சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், செல்லக்குமார், எஸ்.டி.நெடுஞ்செழியன் உட்பட, 56 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே பொருளாளராக இருந்த நாசே ராமச்சந்திரன் மாற்றப்பட்டு, ரூபி மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய துணை தலைவர்களாக, நாசே ராமச்சந்திரன், பலராமன், கோபண்ணா, டி.என்.முருகானந்தம், சொர்ணா சேதுராமன், தாமோதரன், விஜயன் உட்பட, 32 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பொதுச் செயலர்களாக செல்வம், சிரஞ்சீவி, தணிகாசலம், ரங்கபாஷ்யம், வசந்தராஜ், ஜான்சிராணி, கோபி, காண்டீபன் உட்பட, 57 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில், தங்கபாலு மகன் கார்த்தி, இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா, மறைந்த வசந்தகுமார் மகன் நடிகர் விஜய்வசந்த், திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன் ஆகியோருக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், மாநில செயலர்களாக, முனீஸ்வர கணேஷ், கடல் தமிழ்வாணன், ஏ.வி.எம்.செரீப், மோகன்காந்தி, ராமசாமி உட்பட, 104 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட தலைவர்கள் பட்டியலில், திரவியம், டில்லிபாபு, சிவராஜசேகரன், ரஞ்சன்குமார், துரை, முத்தழகன், நாஞ்சில் பிரசாத், ஊர்வசி அமிர்தராஜ் உட்பட, 32 பேர் இடம் பெற்றுள்ளனர். சட்டசபை தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், மாநில தேர்தல் குழு உறுப்பினர்களாக, மேலிட பொறுப்பாளர்கள் சஞ்சய்தத், ஸ்ரீவல்லபிரசாத், கேரள மாநில பொறுப்பாளர் விஸ்வநாதன், ஜே.எம்.ஆரூண், ராணி உட்பட, 34 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


இடம் கிடைக்கவில்லைதேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில், 19 பேர்; தேர்தல் பிரசார குழுவில், 38; விளம்பர குழுவில், 31; தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில், 24; ஊடக ஒருங்கிணைப்பு குழுவில், 16; தேர்தல் நிர்வாக குழுவில், ஆறு பேர் என, மொத்தம், 400க்கும் மேற்பட்டோருக்கு பதவிகள் தரப்பட்டு உள்ளன.
துணை தலைவர், பொதுச்செயலர் உள்ளிட்ட, மாநில நிர்வாகிகள் பட்டியலில், கார்த்தி சிதம்பரத்துக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால், கோபம் அடைந்த அவர், தன் எதிர்ப்பை, 'டுவிட்டர்' பக்கத்தில் காட்டியுள்ளார்.

'இவ்வளவு பெரிய கமிட்டியால், எந்த பயனுமில்லை. 32 துணை தலைவர்கள், 57 பொதுச் செயலர்கள், 104 செயலர்கள் என, நியமிக்கப்பட்ட யாருக்கும், எந்த அதிகாரமும் இருக்காது; அதிகாரம் இல்லாததால், யாருக்கும் பொறுப்பு என்பதும் இருக்காது' என, கூறியுள்ளார்.
சோனியா, ராகுல் ஒப்புதலுடன், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட நிர்வாகிகள் பட்டியலுக்கு, கார்த்தி சிதம்பரம் பகிரங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், காங்கிரசில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
08-ஜன-202119:20:41 IST Report Abuse
பஞ்ச்மணி அல்லாரும் மேஸ்திரிங்கோ ஆரு சித்தாள் பேரியாள் வேல பாக்க நல்ல காமெடி போங்க இன்னுமொரு மெகா ட்ராமா காரோண காலத்துலே 😁🤗👌¯\_(ツ)_/¯
Rate this:
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
06-ஜன-202109:11:29 IST Report Abuse
Vaduvooraan டிரைவர் இல்லாத வாகனம் காங்கிரஸ். இப்போது நானூறு டிரைவர்கள் கான்கிராஸ் இல்லா இந்தியா அமைவதற்கு அந்த கட்சி தலைமையே உதவுகிறது.
Rate this:
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
03-ஜன-202122:36:53 IST Report Abuse
Mannai Radha Krishnan மணிசங்கர் அய்யர் இன்னுமா உயிருடன் இருக்காரு....அவ்ருக்கு கொரோனா வரலையா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X