திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பி வழியும் நிலையில், தெப்பக்குளம் மட்டும் புதர் மண்டி கிடக்கிறது.வடகிழக்கு பருவமழை சமீபத்தில் திருக்கோவிலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கியதால் ஏரி, குளங்கள், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் முழுவதும் நிரம்பி வழிகிறது.ஆனால் நீர் மேலாண்மையை பாதுகாக்கும் வகையில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட திருக்கோவிலுார் நகரின் மையத்தில் இருக்கும் தீர்த்தக்குளம், தெப்பக்குளங்கள் மட்டும் நிரம்பாமல் புதர் மண்டி கிடைக்கிறது.திருக்கோவிலுார் ஏரிக்கு தண்ணீர் வந்தால் இரண்டொரு நாட்களில் இந்த இரண்டு குளங்களும் பாதாள கால்வாய் வழியாக தண்ணீர் சென்று நிரம்பி விடும்.இது நீர் மேலாண்மையை பாதுகாக்க மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட பழமையான வழிமுறையாகும்.ஆனால் மக்களாட்சி நடைபெறும் தற்போது, குடிமராமத்து பணி என்ற பெயரில் நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டு வந்தாலும், திருக்கோவிலூர் தெப்பகுளத்திற்கு தண்ணீர் வரும் வழியை ஆக்கிரமிப்பாளர்கள் அடைத்துவிட்ட நிலையில், அதனை அகற்றி குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான எந்த வழியையும் அரசு மேற்கொள்ளவில்லை.இதனால், தெப்பக்குளம் முள் முளைத்து, புதர்மண்டி கிடப்பது அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE