சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் மோதி கூலி தொழிலாளி பலி

Added : ஜன 02, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி: கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த ஆண்டிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைப்பிள்ளை மகன் சிவசங்கர்,28, கூலி தொழிலாளி.இவர்கடந்த ஒரு வாரத்திற்கு முன் கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேடு கிராமத்தில் உள்ள உறவினரின் வீடு கட்டும் பணிக்காக வந்துள்ளார். கடந்த1ம் தேதி இரவு 10:00 மணியளவில் கூத்தக்குடி சாலையில் இடதுபுற ஓரமாக சிவசங்கர் நடந்து சென்று

கள்ளக்குறிச்சி: கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த ஆண்டிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைப்பிள்ளை மகன் சிவசங்கர்,28, கூலி தொழிலாளி.இவர்கடந்த ஒரு வாரத்திற்கு முன் கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேடு கிராமத்தில் உள்ள உறவினரின் வீடு கட்டும் பணிக்காக வந்துள்ளார். கடந்த1ம் தேதி இரவு 10:00 மணியளவில் கூத்தக்குடி சாலையில் இடதுபுற ஓரமாக சிவசங்கர் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது, அதே திசையில் இவருக்கு பின்னால் வந்த டி.என்.36-ஏஇ-5814 பதிவெண் கொண்ட சுசுகி இக்னிஸ் கார் மோதியது. அதில், படுகாயமடைந்த சிவசங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இதுகுறித்து வரஞ்சரம் போலீசார், விபத்து ஏற்படுத்திய கடலுார் மாவட்டம், சிதம்பரம் தாலுகா, நெல்லிக்கொள்ளை கிராமத்தை சேர்ந்த அருள் மகன்அமுதன்,27; என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். அமுதன் மேலுார் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X