கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமனந்தலை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராமசந்திரன்,30; சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.புத்தாண்டு பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்த ராமச்சந்திரன், தனது நண்பர் சண்முகம் மகன் வெங்கடேசனுடன் சேர்ந்து31ம் தேதி நள்ளிரவு கேக் வெட்டியுள்ளார்.அப்போது ராமச்சந்திரனுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த தங்கமணி மகன் கார்த்திக்தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. உடன் ராமசந்திரன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.இந்நிலையில் கடந்த 1ம் தேதி மாலை 7 மணியளவில் ரோடுமாமனந்தல் பால் ஸ்டோர் அருகே நின்றிருந்த ராமச்சந்திரனை, கார்த்திக் மற்றும் அவரதுநண்பர்கள் ஒன்று சேர்ந்து ஆபாசமாக திட்டி கட்டையால் தாக்கியுள்ளனர். தடுக்க வந்த ஆனந்த், அன்பழகன் ஆகியோரையும்தாக்கினர்.இது குறித்து ராமசந்திரன் அளித்த புகாரின் பேரில் ரோடுமாமனந்தல் கிராமத்தை சேர்ந்த கார்த்திக், சூர்யா, பவின், சிவராமன் ஆகிய 4 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE