திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றியம் வேலங்குடியில் மினி கிளினிக்கை துவக்கி வைத்து அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில் , மினி கிளினிக் துவக்குவதில் தொகுதி பாரபட்சம் பார்க்கப்படுவதில்லை' என்றார்.
கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். சுகாதாரத்துறை துணை இயக்குநர் யசோதா வரவேற்றார். அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில், மாவட்டத்தில் துவக்கப்படும் 36 மினி கிளினிக்குகள் சமமாக தொகுதிகளுக்கு துவக்கப்படுகிறது. திருப்புத்துார் தொகுதி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,என்பதால் பாரபட்சம் பார்க்கவில்லை. இதுவரை 18 கிளினிக்குகள் மாவட்டத்தின் தொகுதிகளுக்கு சமமாக தரப்பட்டுள்ளது. இங்கு குடிநீர் பிரச்னை என்றார்கள். கிராமங்களின் குடிநீர் பிரச்னை தீர்க்க ரூ1850 மதிப்பில் காவிரிக்கூட்டுக் குடிநீர் திட்டம் டெண்டர் முடிந்து துவங்க உள்ளது.' என்றார்.
பெரியகருப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி.,செந்தில் நாதன், மானாமதுரை எம்.எல்.ஏ., நாகராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பாஸ்கரன்,ஊராட்சி ஒன்றியத் தலைவர் சண்முகவடிவேல் , பாம்கோ தலைவர் நாகராஜன். ஆவின் தலைவர் அசோகன், வேளாண் விற்பனைக் குழு தலைவர் சிதம்பரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஊராட்சி தலைவர் அந்தோணி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE